பக்கம் எண் :

கலைச் சொற்கள் 201

Shroff - பணக்கணக்கர்.
Treasury - கருவூலம்.
Contractor - ஒப்பந்தக்காரர்.
Tender - ஒப்பந்தக் குறிப்பு, குத்தகை விவரம்.
Clerk - எழுத்தர்.
Typist - கையெழுத்தர், தட்டெழுத்தர்.
Stenographer - சுருக்கெழுத்தாளர்.
Security - பொறுப்புப் பணம்.
Circular - சுற்றறிக்கை.
Communique - அறிக்கை.
Dearness Allowance - பஞ்சப்படி.
Establishment Charges - நிலைய நடப்புச் செலவு.
Licence - உரிமம்.
Allowance - படி.
Canteen - பணிமனை உணவகம்.

ஆட்சியாளர் தொடர்பானவை

Governor - மாநில ஆளுநர்.
Prime Minister - தலைமை அமைச்சர்.
Cheif Minister - முதலமைச்சர்.

ஆய்வாளர் தொடர்புடையவை

Cheif Examiner - தலைமைத் திருத்தாளர்.
Ticket Examiner - பயணச் சீட்டாய்வாளர்.
Traln Examiner - புகைவண்டி நன்னிலை ஆய்வாளர்.

கழகத் தொடர்பானவை

Academy - கல்விக் கழகம்.
Recreation Club - மனமகிழ் மன்றம். பொழுதுபோக்குக் கழகம்.
Amusement - ஓய்வுநேரக் களிப்பு.

மாநாடு தொடர்புடையவை

Conference - மாநாடு.
Amendment - திருத்தம்.
Agenda - நிகழச்சி நிரல்.
General Body Meeting - பேரவைக் கூட்டம்.
Quorum - கூட்ட நடப்பு எண்ணிக்கை.
Minute Book - கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பேடு.
Propaganda work - விளம்பர வேலை. பரப்பு வேலை.

நூல்வகைத் தொடர்பானவை

Anthology - தொகை நூல்.
Anthropology - மனித இனஇயல் நூல்.
Archaelogy - தொல்பொருள் ஆய்வியல்.
Anatomy- உடற் கூற்றியல் நூல்.
Physiology - உடலியல் நூல்,
Biology - உயிரியல் நூல்.
Botany - பயிரியல் நூல்.
Zoology - விலங்கு இயல் நூல்.
Pshychology - உளத்தியல் நூல்.
Physics - பௌதிக இயல் நூல்.
Chemistry - இரசாயன இயல் நூல், வேதி இயல்.
Politics - அரசியல் நூல்.
Economics - பொருளியல் நூல்.
Bactriology - கிருமி இயல் நூல்.
Entomology - பூச்சி இயல் நூல்.
Geology - தரை இயல் நூல்.
Ethnology - இனமரபியல் நூல். பண்பாட்டுச் சார்பான மனித இன நூல்.
Philology - மொழி நூல்.
Civics - குடிமை நூல்.
Horticulture - தோட்டக்கலை.
Encyclopaedia - கலைக்களஞ்சியம்.
Epic - வீரக்காப்பியம். பெருங்காப்பியம்.
Lyric - சிறிய அளவினதான உணர்ச்சிப் பாடல், தன்னுணர்ச்சிப் பாட்டு.
Epigraph - கல்வெட்டு.
Hymn - கடவுள் வழிபாட்டுப் பாடல்.
Folklore - பாமர மக்கள் மரபுவழிக் கதை அல்லது பாடல்.

இதழ் தொடர்பானவை

Editor - இதழாசிரியர்.
Editorial - இதழாசிரியவுரை.
Presidential Address - தலைமையுரை.
College Magazine - கல்லூரி வெளியீடு.
Monthly Magazine - திங்கள் வெளியீடு.
Quarterly Magazine - முத்திங்கள் வெளியீடு.
Fortnightly Magazine - திங்கள் இருமுறை வெளியீடு.
Weekly Magazine - வார வெளியீடு.
Yellow Journals - இழிநிலை ஏடுகள்.
Paper Office - நாளிதழ் வெளியீட்டகம்.
Printing Press - அச்சகம்.
Publishing House - பதிப்பகம்.
Scholl Books Publisher - பள்ளிநூல் வெளியீட்டாளர்.
Proof - திருத்தத்துக்கான அச்சுப்படி.
Galley Proof - பக்கம் கட்டாத பார்வை அச்சுப்படி.
Page Proof - பக்கத் திருத்தப்படி.
Translation - மொழி பெயர்ப்பு.
Transliteration - எழுத்துப் பெயர்ப்பு.