பக்கம் எண் :

202நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

மின்சாரத் தொடர்பு உடையவை

Electric fan - காற்றாடி. மின்விசிறி.
Bulb - மின் குமிழ்.
Switch - தள்ளுபிடி. பொருத்தி.

கண்டுபிடிப்பு முதலியவை

Discovery - கண்டுபிடிப்பு.
Invention - புதுப்பொருள் புனைவு.
Telephone - தொலைபேசி.
Television - தொலைக் காட்சி.

போக்குவரத்து

Ry. Level Crossing - இருப்புப் பாதைக் கடப்பிடம்.
Transport - போக்குவரத்து.
Aviation - வான்வழிப் போக்குவரத்து.
Aerodrome - வானூர்தி நிலையம்.
Reservation - ஒதுக்கீடு.
Velocity - வேகம்.
Boarding amp; Lodging - உண்டுறை விடுதி.
Travellers Bungalow - வழிப்போக்கர்வளமனை.
Rest House - தங்கு விடுதி.
Poor House - அறக்கூழ்ச்சாலை.
Work House - தொழிலகம்.

அலுவலகத் தொண்டர்

Attender - கையாள்.
Peon - ஏவலாள்.

கட்சி

Communist - பொதுவுடைமையாளர்.
Socialist - சமவுடைமையாளர்.

நூல் தொடர்புடையவை

Hypothesis - எடுகோள்கள்.
Criticism - திறனாய்வு.
Book Review - மதிப்புரை.
Background - பிற்புலம்.
Villain - அழிம்பன், கொடியன்.
Couplet - ஈரடிப் பாட்டு.

அலுவலகத் தொடர்புடையவை

Office - அலுவலகம்.
Register Office - ஆவணக்களரி.
Registrar - பதிவாளர்.
Financial Year - நிதி ஆண்டு.
Indent - தேவைப் பட்டியல்.
Extract - எடு குறிப்பு.
Suspend - விலக்கி வை.
Dismissal - வேலையை விட்டு நீக்கல்.

வண்டிகள் தொடர்புடையவை

Engine - இழுவை வண்டி.
Locomotives - நீராவி இழுவை வண்டி. மின் இழுவை வண்டி.
Express - விரைவு வண்டி.
Passenger - பயணர் வண்டி.
Wagon - சரக்கு வண்டி.
Motor Car - உந்து வண்டி.
Pleasure Car - மகிழ்வுந்து.
Bus - பேருந்து.
Lorry - சரக்கு உந்து வண்டி.
Bus Stand - பேருந்து நிலையம்.
Motor Car Stand - உந்து நிலையம்.
Guard - வண்டிக்காப்பாளர்.
Break - நிறுத்துத்தடை.

காவல்துறைத் தொடர்பானவை

C.I.D. - துப்புத் துலக்கும் துறை (து,து,துறை)
Police Commissioner - காவல் துறை ஆணையர்.
Police Inspector - காவல் துறை மேற்பார்வையாளர்.
Police Station - காவற்கூடம்.
Out-post - புறக்காவல்.
Policeman - காவல்துறை ஆள்.

விளையாட்டுத் தொடர்பானவை

Play-ground - விளையாட்டிடம்.
Stadlum - விளையாட்டரங்கு.

சில கருத்துத் தொடர்பானவை

Personality - ஆளுமை.
Intuition - உள்ளுணர்வு.
Monotony - சலிப்புணர்ச்சி.
Ideology - கொள்கை.
Instinct - இயல்பூக்கம்.
Commonsense - இயல்பறிவு,
Objective - புறவயம்.
Subjective - அகவயம்.
Temperament - மனப்பான்மை.
Tendency - உளப்போக்கு.
Tension - பதற்ற நிலை.

இங்குத் தெரிந்தவைகள் விடப்பட்டன. புத்தம் புதுக்கருத்துக்களைப்
பூதச்செயல்களின் நுட்பங்களை இத்தமிழ் மொழியில் எழுத வழியுண்டு
என்பதை இங்குக் குறிப்பிட்டுள்ள ஒரு சில கலைச்சொற்களால் உணரலாம்.