பக்கம் எண் :

சில தமிழாட்சிக் சொற்கள்203

13. சில தமிழாட்சிக் சொற்கள்

இந்திய நாட்டு மாநிலச் சீரமைப்பு 1956 ஆம் ஆண்டு நவம்பர் முதல்
நாள் நடைமுறைக்கு வந்துவிட்டது, தமிழும். தமிழ் நாட்டு அரசியல்
மொழியாய்விட்டது, 1981 ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி தமிழகத்தில்.
வாழும் 4 கோடி 82 லட்சத்து 97 ஆயிரத்து 466 மக்களுள் மிகப்பெரும்
பகுதியினர் தமிழர்களாக இருப்பதால், தமிழ்நாட்டில் தமிழிலேதான்
அரசாங்கம், அரசியல் மன்றம். வழக்கு மன்றம். அலுவலகம் முதலியவை
நடைபெற வேண்டுவது இன்றியமையாதது, மத்திய அரசாங்கத் தொடர்புக்கும்
விஞ்ஞான அறிவு வளர்ச்சிக்கும் நாட்டு முன்னேற்றத் திட்டங்களுக்கும்
ஆங்கிலம் கட்டாயம் வேண்டும்,

சங்க காலத்தில் தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி புரிந்த போது தமிழ்தான்
ஆட்சி மொழியாய் இருந்தது, வடமொழியை ஆதரித்த பல்லவர் தமிழகத்தை
ஆண்ட காலத்திலும். பிற்காலச் சோழபாண்டியர் ஆட்சி செய்த காலத்திலும்
தமிழ்தான் ஆட்சி மொழியாய் இருந்தது. தெலுங்கர்களான விஜயநகர அரசர்கள்
ஆட்சி 366 ஆண்டுகள் தமிழகம் முழுதும் நடைபெற்ற காலத்திலும் தமிழ்தான்
ஆட்சி மொழியாய் இருந்தது, இவ்வளவு ஏன்? ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்திலும் நெடுங்காலம் தமிழ்தான் ஆட்சி மொழியாய் இருந்தது,
ஆங்கிலேயர் ஆட்சியின் முற்பகுதியில் ஆங்கிலம் நன்கு அறியாதவர்களே
மாவட்ட ஆட்சித்தலைவர்களாயும் காவல்துறைத் தலைவர்களாயும்
ஆட்சியாளர்களாயும் நீதிபதிகளாயும் இருந்து, பொது மக்களோடு
தொடர்புகொண்டு திறமையாய்ச் செயலாற்றி
வந்தார்கள், வழக்கு மன்றங்களும் அப்போது தமிழில் நடைபெற்றன,
தமிழ்நாட்டில் தமிழ் மக்களோடு தொடர்புகொள்ள வேண்டுமென்றாலும், தமிழ்
மக்களை ஆட்சியில் பொறுப்புணர்ச்சி உள்ளவர்களாகச் செய்யவேண்டுமென்றாலும்,
தமிழ்மக்கள் சட்டசபையில் நன்கு பங்குகொள்ளவேண்டுமென்றாலும். தமிழகத்தின்
தாய் மொழியான தமிழிலேதான் எல்லாம் நடைபெற வேண்டும், வேறு
மொழியில் நடைபெறுவது கூடாது, ஆதலால் அதற்கு இக்காலத்துக்குத்
தக்கவாறு ஆட்சிச் சொற்களைக் கூடிய மட்டும் விளங்கும் முறையில்
ஆக்கித் தருதல் நமது கடமை, பலர் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், கீழே
வருபவை ஓரளவு பயன்படும்,

(அறிஞர் சிலர் வெளியிட்டவற்றின் தொகுப்பு இது, ஒருசில
மதுரையில் நடைபெற்று நின்றுவிட்ட ‘தமிழ்நாடு’ நாளிதழில் வெளிவந்தவை,
ஆட்சிச் சொற்களுக்குக் கலைச் சொல் அதிகாரத்தையும் பார்க்கவும்)

அலுவலகத் தொடர்பானவை

Establishment - பணியாயம்,
Accountant - கணக்கர்.
Agent - முகவர், பதில் ஆளர், பேராளர்.
Administration Report - ஆட்சி அறிக்கை.
Appointment Order - அமர்த்தாணை.
Preference - முன்னுரிமை.
Apprentice - பயிற்சியாளர்.
Advance - முன் பணம்.
Manager - மேலாளர்.
Lower Division Clerk - கீழ்நிலை எழுத்தர்.
Upper Division Clerk - மேனிலை எழுத்தர்.
Bill Collector - தண்டலாளர்.
Money order - பணவிடை.
Record Keeper - ஆவணக் காப்பாளர்.
Supervisor - மேற்பார்வையாளர்.
Superintendent - மேற் கண்காணிப்பாளர்.
Service Book and Rolls - பணியேடும் பணியாளர் பட்டியலும்.
Draft - வரைவு.
Rough Draft - அரைகுறை வரைவு, திருத்தமற்ற வரைவு.
Final Draft - திருத்த வரைவு.
Copy - படி.
Copyist - படியெடுப்போர்.
Office Copy - கையிருப்புப்படி, பணியகப்படி.
Fair Copy - திருத்தப்படி.
Typed Copy - கையச்சுப்படி.
File - கோப்பு.
Current File - நடப்புக் கோப்பு.
Note File - குறிப்புக் கோப்பு.
Urgent File - உடனடிக் கோப்பு.
Submission of file - கோப்புகளை மேலிடம் அனுப்பல்.
Blotting Paper - மையொற்றி.
Carbon Sheet - படியெடுமைத்தாள். மைத்தாள்
Clerk - எழுத்தர்.
Tamil writers - தமிழ் எழுத்தாளர்கள்.
Typist- கையச்செழுத்தர். தட்டெழுத்தர்.
Typewriter - கையச்சுப்பொறி.
Cyclostyle - படியெடுகருவி.
Correspondence - கடிதப் போக்குவரத்து.
Offical Letter - அலுவல்கடிதம்.
Private Correspondence - சொந்தக் கடிதப் போக்குவரத்து.
Cover - கூடு, அஞ்சல் உறை.
Card - அட்டை. அஞ்சலட்டை.
Covering Letter - உடனுறை கடிதம்.
Despatch - அனுப்புதல்.
Despatch by local delivery - நேரில் கொடுக்க அனுப்புதல்.
Despatch by post - அஞ்சல் வழி அனுப்புதல்.