19.
எளிய சந்தி விதிகள்
சிலர், விடியர்க்காலை எனவும், தகுந்தாப்போல் எனவும்,
நன்றாய்யிருக்கும் எனவும், நிலையில் யிருக்காது எனவும், எவ்வாறு
யெனின் எனவும், போக யிருந்தார் எனவும் தவறாக எழுதுகின்றனர்.
விடியற்காலை என்றும், தகுந்தாற்போல் என்றும், நன்றாய் இருக்கும்
என்றும், நிலையில் இருக்காது என்றும், எவ்வாறெனின் என்றும்,
போகவிருந்தார் என்றும் எழுதவேண்டும். பந்தக்கால் என்று
திருமண அழைப்பில் எழுதவதைக் காணலாம். இது தவறு,
பந்தல் + கால் = பந்தற்கால் என்றே வரும். பந்தக்கால் என்பதற்கு,
பந்தம் கொளுத்தி வைப்பதற்குரிய கால் என்று பொருள்பாடும்.
இத் தவறுகளை நன்குணர்ந்து கொள்ள வேண்டுமெனில் சில புணர்ச்சி
விதிகளை அறிந்து கொள்ள வேண்டுவது இன்றியமையாதது.
புணர்ச்சி - சந்தி.
புணர்ச்சி என்பது நிலைமொழி ஈறும் வருமொழி முதலும்
ஒன்றுபடச் சேர்வது. இப்புணர்ச்சி இரு வகைப்படும்; ஒன்று இயல்பு
புணர்ச்சி; மற்றொன்று விகாரப் புணர்ச்சி. நிலைமொழியும்
வருமொழியும் சேரும்போது எந்த மாறுபாடும் அடையாமல் இயல்பாய்
இருப்பது இயல்பு புணர்ச்சி எனப்படும்; மாறுபாடு அடைவது விகாரப்
புணர்ச்சி எனப்படும்.
|
புணர்ச்சி
|
|
இயல்பு புணர்ச்சி
|
விகாரப் புணர்ச்சி
|
கண்டு பேசினார், என்று கூறினார், வந்து தந்தார், செய்து
சொன்னான் - இயல்பு புணர்ச்சி.
|