தோன்றல்
உடம்படு மெய்
வந்த+உடன் = வந்தவுடன் என்று சேர்த்தெழுத வேண்டும்.
வந்த என்னும் சொல்லின் ஈறறில் அகர ஒலி இருக்கிறது.
வருமொழியாகிய உடன் என்பதன் முதல் எழுத்து உகரம். இந்த
இரண்டு உயிர் ஒலிகளையும் ஒன்று படுத்தும் ‘வ்’ என்னும்
மெய்யெழுத்தையே உடம்படுமெய் என்கிறோம்.
‘வ்’ என்றும், ‘ய்’ என்றும் இரண்டுவகை உடம்படு மெய்கள்
உண்டு. முன்னதை வகர உடம்படு மெய் எனவும், பின்னதை யகர
உடம்படு மெய் எனவும் கூறுவர்.
உயிரீற்றுக்கு முன் உயிர் முதல் மொழி வருமிடத்து
அவ்விரண்டு உயிரொலிகளையும் விட்டிசைக்காது ஒன்றுபடுத்தி
ஒலித்தல் அரிதாகலின், அவற்றை உடன்படுத்தற்கு இடையே ஒரு
மெய்யெழுத்துத் தோன்று கின்றது. அதுதான் உடம்படு மெய்
என்பது.
வகர உடம்படு மெய்
அ, ஆ, உ, ஊ, ஓ என்னும் உயிரொலிகளுள் ஏதாவது
ஒன்று நிலைமொழியின் கடைசியில் இருக்க, வருமொழி முதலில்
பன்னிரண்டு உயிரரெழுத்துகளுள் எது வந்தாலும் வகர மெய் தோன்றும்.
போன + உடன் =
மா + இலை =
திரு + ஆருர் =
பூ + எழுத்து =
கோ + இல் = |
போனவுடன்
மாவிலை
திருவாரூர்
பூவெழுத்து
கோவில் |
வந்தஉடன், போனஉடன் என்று பிரித்தெழுதுதலே கூடாது;
சேர்த்தே எழுதுதல் வேண்டும். வர+இல்லை என்னும் சொற்களை
வரவில்லை என்றுதான் எழுதவேண்டும்.
|