பக்கம் எண் :

252நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


யகர உடம்படுமெய்

நிலைமொழியீற்றில் இ,ஈ,ஐ ஒலிகளுள் ஏதாவது ஒன்று இருக்க,
வருமொழி முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளுள் எது வந்தாலும்
யகர உடம்படு மெய் தோன்றும்.

கூலி+ஆள் =
தீ+ஆல் =
கை+எழுத்து =
கூலியாள்
தீயால்
கையெழுத்து

‘ஏ’ முன் இருமையும்

ஏ ஒலியுடை சொல்லானது பெயர்ச் சொல்லாயின் வகரவுடம்படு
மெய்யும், இடைச் சொல்லாயின் யகரவுடம்படு மெய்யும் பெற்று வரும்.

தே+ஆரம் =
கறியே+இல்லை =
தேவாரம்.(தே - கடவுளுக்குச்
சூட்டப்படும்; ஆரம் - பாமாலை.)
கறியேயில்லை.

வீரமாமுனிவர் உள்ளிட்ட அக்காலப்புலவர்கள் உடம்படு
மெய்யை வீணான இடங்களிலும் பயன்படுத்தினார்கள். வீரமாமுனிவர்
இத்தாலியர்; 18-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் கிறித்தவ ஊழியம்
செய்தவர். அக்காலத்தைப் பின்பற்றி, தமது கொடுந்தமிழ் என்ற நூலில்
இந்த வாசை, அவனோ வென்றால், நீயின்று வா என்று
எடுத்துக்காட்டுகள் காட்டியுள்ளார்.

உடம்படுமெய் வேண்டுமா? என்னும் வினா எழுகிறது.
செய்யுளைப் பிரித்துப் பொருள் உணர்ந்து கொள்வதற்கு இது
மிகமிக இன்றியமையாதது. தவறாகப் பிரிக்காமல் சொற்களை
எழுதுவதற்கும் இது வேண்டும். ‘போக+இருந்தார்’ என்னும்
இரண்டையும் சேர்த்தெழுதும்போது ‘போகவிருந்தார்’ என்று எழுதத்
தெரிந்து கொள்வதற்கு உடம்படுமெய் தெரிய வேண்டுவதுதான்