பக்கம் எண் :

266நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

மெய் + ஞானம் =
மெய் +நெறி =
செய் + செறி =
மெய் + மறந்து =
கை + மாற்று =
பாழ் + கிணறு =
மெய்ஞ்ஞானம்.
மெய்ந்நெறி.
செய்ந்நெறி.
மெய்ம்மறந்து.
கைம்மாற்று.
பாழ்ங்கிணறு.

* * *

அது + அன் + ஐ =
அது + அன் + ஆல் =
அது + அன் + கு =
எது + அன் + ஐ =
அதனை.
அதனால்.
அதற்கு.
எதனை.

* * *

அவ் + அற்று + ஐ =
குரங்கு + இன் + ஐ =
அவற்றை.
குரங்கினை.

* * *

பல + அற்று + ஐ =
சில + அற்று + ஐ =
பலவற்றை.
சிலவற்றை.

* * *

சந்தியினால் வரும் பொருள் வேறுபாட்டைக் கீழே காண்க:

வடுகக்கண்ணன் -
வடுகங்கண்ணன் -
நாதன் பாடினான் -
நாதற்பாடினான் -
வடுகநாட்டில் பிறந்த கண்ணன்.
வடுகனாகிய கண்ணன்.
நாதன் பாடினான்.
மற்றொருவன் நாதனைப் பாடினான்.