பக்கம் எண் :

சில சந்தி முறைகள் 267


இரட்டித்தலும் இரட்டியாதிருத்தலும்
தனிக்குறிலை அடுத்த மெய்முன் உயிர்

கல் + உடைத்தான் =
முள் + இல்லை =
மண் + உலகு =
கல்லுடைத்தான்.
முள்ளில்லை.
மண்ணுலகு.

தனிக்குறிலை அடுத்து வாராத மெய்முன் உயிர்

கால் + இல்லை =
புகழ் + எங்கே =
தோன்றல் + அழகன் =
வந்தான் + இலன் =
காலில்லை
புகழெங்கே?
தோன்றலழகன்
வந்தானிலன்

சந்தி பிரித்துப் படிக்கப் பயிற்சி அளிப்பதற்கு ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்புகூட மாணவர்களைத் திருவேங்கடத்து அந்தாதி
போன்ற நூல்களைக் கற்கும்படி செய்தார்கள் ஆசிரியர்கள். இந்தச்
சந்தி முறைகளை ஆழ்ந்து படித்தால் செய்யுளை எளிதாகப் பிரித்துப்
பொருள் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு எளிய முறையிற் கூறப்பட்ட சந்தி முறைகளை நன்கு
மனத்தில் பதிய வைத்துக் கொண்டால், உண்மையாகத் தமிழ்
மொழியைப் பிழையற எழுதுவது மட்டுமன்றித் தெள்ளுற்ற தமிழமுதின்
சுவை கண்டு இன்புறலாம்.

தமிழனுக்குத் தனிமையை இனிமையுறச் செய்வது தமிழ்ப் பாட்டைத்
தவிர வேறென்ன உண்டு?

"தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை"

என்பது மிகமிக உண்மை. தமிழ்ப் பாட்டுகளின் தனிப்பட்ட சுவையை
நுகரவும் பிழையற எழுதவும் இச்சந்தி முறைகளை நன்கு தெரிந்து கொள்க.