பக்கம் எண் :

268நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


21.
தமிழில் வழங்கும்
வடமொழி இலக்கணம்

வடமொழிச் சந்திகள்

தமிழில் பல வடமொழித் தொடர்கள் வந்து வழங்குகின்றன.
அவை பெரும்பாலும் அவ் வடநூல் புணர்ச்சியையே பெறும். தமிழில்
வரும் வடமொழித் தொடர்களைப் பிழையின்றி எழுத இவற்றைத்
தெரிந்து கொள்வது நன்று.

புணர்ச்சியை வடநூலார் சந்தி என்பர். தமிழி்ல தீர்க்க சந்தி, குண
சந்தி, விருத்தி சந்தி என்னும் மூன்று வடமொழிச் சந்திகள் வந்து
வழங்குகின்றன. மிகுதியாக வழங்குபவை முதலிரண்டு சந்திகளே.
இச்சந்தி முறை வடசொற்களுக்கே உரியது என்றறிக.

I. தீர்க்க சந்தி

தீர்க்க சந்தி மூன்று வகையாக வரும்.

1. நிலையமொழியீற்றில், ‘அ’, அல்லது ‘ஆ’ இருந்து வருமொழி
முதலில் ‘அ’ அல்லது ‘ஆ’ வந்தால் நிலைமொழியில் உள்ள உயிரும்
வருமொழியில் உள்ள உயிரும் ஆகிய இரண்டும் கெடச் சந்தியில்
ஓர் ‘ஆ’ தோன்றும்.

(‘ஆ’ தோன்றுதல்)

குண + அனுபவம் =
சர்வ + அதிகாரி =
அமிர்த + அஞ்சனம் =
வேத + ஆகமம் =
சேனா + அதிபதி =
குணானுபவம்.
சர்வாதிகாரி.
அமிர்தாஞ்சனம்.
வேதாகமம்.
சேனாதிபதி.