பக்கம் எண் :

தமிழில் வழங்கும் வடமொழி இலக்கணம் 269

குறிப்பு: பால்+அபிஷேகம் = பாலபிஷேகம். இத்தொடரைப்
பாலாபிஷேகம் என்றெழுதுவது தவறு.

2. நிலை மொழியீற்றில் ‘இ’ அல்லது ‘ஈ’ இருந்து வருமொழி
முதலில் ‘இ’ அல்லது ‘ஈ’ வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் ‘ஈ’ தோன்றும்.

(‘ஈ’ தோன்றுதல்)

கவி + இந்திரன் =
கிரி + ஈசன் =
மஹீ + இந்திரன் =
நதீ + ஈசன் =
கவீந்திரன்.
கிரீசன்.
மஹீந்திரன்.
நதீசன்.

3. நிலைமொழியீற்றில் ‘உ’ அல்லது ‘ஊ’ இருந்து வருமொழி முதலில்
‘ஊ’ வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் ‘ஊ’ தோன்றும்.

(ஊ தோன்றுதல்)

குரு + உபதேசம் =
சுயம்பூ + ஊர்ஜிதம் =
குரூபதேசம்.
சுயம்பூர்ஜிதம் (சிவநிலை).

II. குணசந்தி

1. நிலைமொழியீற்றில் ‘அ’ அல்லது ‘ஆ’ இருந்த வருமொழி முதலில்
‘இ’ அல்லது ‘ஈ’ வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் ‘ஏ’
தோன்றும்

(‘ஏ’ தோன்றுதல்)

ராஜ + இந்திரன் =
தேவ + இந்திரன் =
மகா + ஈஸ்வரன் =
யதா + இச்சை =
கங்காதர + ஈஸ்வரர் =
ராஜேந்திரன்.
தேவேந்திரன்.
மகேஸ்வரன்.
யதேச்சை. (மனம்போன போக்கு)
கங்காதரேஸ்வரர்.