2. நிலைமொழியில் ‘அ’ அல்லது ‘ஆ’ இருந்து வருமொழி
முதலில்
‘உ’ அல்லது ‘ஊ’ வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் ஓர் ‘ஓ’
தோன்றும்.
(‘ஓ’ தோன்றுதல்)
சர்வ + உதயம் =
சூரிய + உதயம் =
சந்திர + உதயம் =
சக + உதரன் =
ஞான + உதயம் =
|
சர்வோதயம்.
சூரியோதயம்.
சந்திரோதயம்.
சகோதரன். (உடன்பிறந்தான்)
ஞானோதயம்.
|
III.விருத்தி சந்தி
1. நிலைமொழியீற்றில் ‘அ’ அல்லது ‘ஆ’ இருந்து வருமொழி முதலில்
‘ஏ’ அல்லது ‘ஐ’ வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் ‘ஐ’ தோன்றும்.
(‘ஐ’ தோன்றுதல்)
லோக + ஏகநாயகன் =
சர்வ + ஐஸ்வரியம் =
தேவதா + ஐக்யம் =
தேவதா + ஏகத்வம் =
|
லோகைகநாயகன்.
சர்வைஸ்வரியம்.
தேவதைக்யம்.
தேவதைக்தவம்.
|
2. நிலைமொழியீற்றில் ‘அ’ அல்லது ‘ஆ’ இருந்த வருமொழி முதலில்
‘ஒ’ அல்லது ‘ஒள’ இருந்தால், அவ்விரண்டும் கெட ஓர் ‘ஒள’
தோன்றும்.
(‘ஒள’ தோன்றுதல்)
வந + ஓஷதி =
பரம+ஒளஷதம் =
மகா+ஓஷதி =
|
வநௌஷதி. (காட்டுமூலிகை)
பரமௌஷதம்.
மகௌஷதி.
|
|