பக்கம் எண் :

தமிழில் வழங்கும் வடமொழி இலக்கணம் 271


உபசர்க்கங்கள்

உபசர்க்கம் என்பது வடமொழியில் வினைச்சொல்லுக்கு முதலில்
சேர்ந்து வருவது. தமிழ் உபசர்க்கங்கள் மிகமிகச் சில. வடமொழி
உபசர்க்கங்கள் தமிழில் வந்து வழங்குகின்றன. அவற்றைத் தெரிந்து
கொள்வது பிழையின்றி எழுதுவதற்கும் பொருள் தெரிந்து
கொள்வதற்கும் பயன்படும்.

தமிழ் உபசர்க்கம்

தலை, கை - தலை சிறந்த, கைக்கொள்.

வடமொழி உபசர்க்கம்

(இன்மைப்பொருள் தருவன)
அப, அவ, நிஷ், நிர், வி.

அப =
அவ =
நிஷ் =
நிர் =
வி =
அபகீர்த்தி.
அவமானம்.
நிஷ்காரணம், நிஷ்காமிய கர்மம்.
நிர்பாக்கியம், நிரபராதி, (நிர் + அபராதி)
விரக்தி. (ரக்தி - பற்று; விரக்தி - பற்றின்மை)

(பற்பலபொருள் தருவன)

அதி - மேல், மிகுதி = அதிரூபம், அதிவிநோதம்.
அதோ - கீழ் = அதோமுகம், அதோகதி.
அநு - பின், கூட = இராமாநுஜன், அநுகூலம்.
அபி - மிகுதி = அபிவிருத்தி.
உப - துணை = உபகரணம். (துணைக்கருவி)
கு - அற்ப, வீண்,
இழிவான. =
குக்கிராமம், குதர்க்கம்,
குசேலன்.
சக - கூட = சகவாசம்.