பக்கம் எண் :

272நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

சம் - கூட = சம்பந்தம்.
சம் - நல்ல = சம்பாஷணை.
சன், சு. - நல்ல = சன்மார்க்கம், சுமதி.
துர் - கெட்ட = துர்க்குணம், துர்மந்திரி,
துராலோசனை. (துன்மந்திரி,
துன்மார்க்கம் என்பவை தவறுகள்)
பரி - முழுதும் = பரிபூரணம், பரிபாலனம்.
பிரதி - பதில், திரும்ப. = பிரதியுபகாரம், பிரதிபிம்பம்.
வி - வேறு, மேலான. = விதேசி, விநாயகன்.(விநாயகன் -
மேலான நாயகன். வினாயகன்
என்று எழுதுவது தவறு.)

தந்திதாந்த நாமங்கள்

வடமொழியிலுள்ள தத்திதாந்த நாமம் தமிழ் மொழியில்
வந்து வழங்குகின்றது. தத்திதாந்த நாமம் என்பது, பெயரினின்று
தோன்றிய பெயர். (தத்+ஹித+அந்த+நாமம்)

1. முதலில் அகரத்தையுடைய சொற்கள் ஆகாரமாகத் திரிந்து வரும்.

தசரதன் -
பகீரதன் -

பரதன் -
தாசரதி. (தசரதன் மகன்) (இராமன்)
பாகீரதி. (பகீரதனால் கொண்டு வரப்பட்டது)
(கங்கை)
பாரதம். (பரதனால் ஆளப்பட்டது பாரதம்)
(இந்தியா)

2. முதலில் ஆகாராத்தையுடைய சொற்கள் முதல் திரியாமலே
வரும்.

சாரதி - சாரத்யம்