பக்கம் எண் :

சொற்றொடர்ப் பிரிப்புத் தவறுகள் 275


ரயில் நிலைய அறிவிப்புப் பலகை ஒன்றில் ‘பிரயாணி கள் சாப்பிடும்
இடம்’ என்றிருந்ததாம். என்ன பொருள்? பிரயாணி கள்ளைக் குடிக்கும்
இடம் என்பது பொருள். இப்படி மிகவும் வெளிப்படையாகக் கள்
குடிப்பதற்கு ஓர் இடத்தை ரயில் நிலையத்தார் ஏற்படுத்தி வைப்பாரோ?
இல்லை. எழுதினவர் பிராயாணிகள் சாப்பிடும் இடம் என்று கள்
விகுதியைப் பிரயாணி என்னும் சொல்லுடன் சேர்த்தெழுதியிருந்தால்,
இந்த வேறுபாடான பொருளே வந்திராது. எனவே, சொற்களையும்
சொற்றொடர்களையும் விழிப்பாகப் பொருள் மாறுபடாதவாறு பிரிக்க
வேண்டும்.

‘முனிவர் தம்’ வரலாற்றில் கூறினார்’ என்னும் வாக்கியத்திற்கும்
‘முனிவர்தம்’ வரலாற்றில் கூறினார்’ என்னும் வாக்கியத்திற்கும் மிகுந்த
வேறுபாடு, ‘தம்’ என்பதைப் பிரித்தெழுதுவதாலும், சேர்த்தெழுவதாலும்
தோன்றுவதைக் காணலாம், முதல் வாக்கியத்தில் ‘முனிவர் தம்
வரலாற்றில் கூறினார்’ என்பது பொருள். இரண்டாவது வாக்கியத்தில்,
‘முனிவருடைய வரலாற்றில் மற்றொருவர் கூறியுள்ளார்’ என்பது
பொருள். முனிவர்-தம்-முனிவருடைய. ‘தம்’ என்பதைச்
சேர்த்தெழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் வீட்டிலிருந்து
போனார் என்பதற்கும், அவர் வீட்டில் இருந்து போனார் என்பதற்கும்
வேறுபாடு கண்டு பிடியுங்கள். இரண்டாவது வாக்கியத்தில் உள்ள
‘இருந்து’ என்னும் சொல்லுக்குத் தங்கி என்று பொருள் தோன்றக்
காணலாம். ஆதலால், வேற்றுமை உருபுகளைச் சேர்த்தெழுத வேண்டும்.

மொழி நூலாசிரியர்கள் மொழிகளைத் தனிநிலை மொழி
என்றும், உட்பிணைப்பு நிலைமொழி என்றும், ஒட்டு நிலை மொழி
என்றும் மூன்று வகையாகப் பாகுபாடு செய்கிறார்கள். சீனமொழி,
திபத்துமொழி, சையாம் மொழி என்பவை தனிநிலை மொழிகள்.
சொற்கள் தனித்தனியாக இருக்குமாம். வடமொழி உட்பிணைப்பு