நிலை மொழி. சொற்கள் பிணைந்து நிற்பது உட்பிணைப்பு நிலை
மொழியாகும். ராணி என்னும் சொல் தமிழில் வழங்கும் வடசொல்.
இஃது இரு சொற்கள் உட்பிணைந்து வந்துள்ள சொல்லாம். தமிழ்
மொழி ஒட்டுச் சொல் மொழி. பார்-த்-த்-ஆர்-கள் என்பன. இப்படி
ஒட்டி வந்த சொல்லே பார்த்தார்கள் என்னும் சொல். கண்+அன்
என்பவை கண்ணன் என ஒட்டுச் சொல்லாகச் சேரும். எனவே ஒட்டுச்
சொல் மொழியாகிய தமிழில் பிரிப்பதில் தவறு ஏற்படுமானால்
பொருளே மாறுபட்டு விடும்; ‘பிரயாணி கள் சாப்பிடும் இடம்’
போலாகிவிடும். இங்குப் பழங் கள் கிடைக்கும் என்று
பிரித்தெழுதினால் பழமையான கள் கிடைக்கும் என்று தானே
பொருள்படும்? பழங்கள் என்று சேர்த்து எழுதினால் அச்சொல்
பழ வகைகள் கிடைக்கும் என்னும் பொருள் தரும் அவரைப்பூவில்
காணலாம் என்னும் சொற்றொடரை அவரைப் பூவில் காணலாம்
எனத் தவறாகப் பிரித்தெழுதினால் என்ன பொருள் தரும்? பலகைத்
தொழில் என்னும் தொடரைப் பல கைத் தொழில் என்று பிரித்தால்
தவறான பொருள் தானே வரும்? ஆகையால், சொற்றொடர்களைப்
பிரித்தெழுதும் போது மிகுந்த கவனம் செலுத்துவது இன்றியமையாதது.
பிழை
அவ் ஊர்
வந்த உடன்
வீட்டில் இருந்து
அவர்கள் இடம்
வர அழைத்தான்
வெளி ஏறினர்
சொற் கோவை
தெரிந்து கொள்க
திருத்தம் அவ்வூர்
வந்தவுடன்
வீட்டிலிருந்து
அவர்களிடம்
வரவழைத்தான
வெளியேறினர்
சொற்கோவை
தெரிந்துகொள்க