வந்து விட்டன்
மிகுதியாகும் ஆனால்
பலாச்செடி
வெந் நீர்
கட்டளை இட்டான்
சிந்தித்து மாய்ந்து கொண்டும்
திரு நீலகண்டர்
|
வந்துவிட்டான்
மிகுதியாகுமானால்
பலாச்செடி
வெந்நீர்
கட்டளையிட்டான்
சிந்தித்தும் ஆய்ந்து கொண்டும்
திருநீலகண்டர் |
‘திரு நீலகண்டர்’ என்னும் சொற்றொடரை இடம் விட்டுப்
பிரித்தெழுதினால் ‘திருவாளர் நீலகண்டர்’ என்றாகிவிடும். ‘ஜலந்தன்
குளிர்ச்சியை மாற்றினும் மாற்றும்’. இங்கே, ‘ஜலம் தன்’
என்றிருந்தால்தான் பொருள் விளக்கமாகத் தெரியும். ‘அவ்’ என்பது
பலவின்பாற் சுட்டாதலால் அவ்+ஊர் என்று பிரித்தலாகாது. அ+ஊர்
என்றே பிரிக்க வேண்டும். அ+ஊர் - வ் இரட்டித்து அவ்வூர்
என்றாகும் என்பதறிக.
சொற்களை எழுதும்போது தவறாகச் சிலர் பிரித்தெழுதுவர்.
ஆங்கிலத்தில் சொற்களைப் பிரிக்கும்போது இடமில்லாத காரணத்தால்
அவை அசையாகப் பிரித்து இணைத்துக்காட்ட - இவ்விதமாகச் சிறு
கோடிடக் காண்கிறோம். ஆங்கிலத்தில் சொற்களை இடமுட்டுப்
பாட்டால் பிரிக்கும் போது ஆங்கில அகராதியிற் குறிப்பிட்டவாறு
தவறு நேராத முறையில் பலர் பிரித்தெழுதுகின்றனர்; அச்சிடுகின்றனர்.
ஆனால், தமிழில் பலர் சொற்களைத் தவறாகப் பிரிக்கின்றனர்.
மொழியறிவுமிக்கவர்கள் ஆங்கிலத்தை எழுதுவதனால் அதில்
தவறுகள் நேர்வதில்லை. தமிழில் அப்படி இல்லாமையே இத்தகைய
தவறுகளுக்குக் காரணமாகிறது. சொற்றொடர்களைப் பிரிப்பதிலும்
தவறு வரக்கூடாது.
|