பக்கம் எண் :

278நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

பிழை திருத்தம்
1. கோ
தண்டராமன்
கோதண்டராமன்
2. இரட்டை
ச்சகோதரர்கள்
இரட்டைச்
சகோதரர்கள்
3. வளர்ந்து வந்தான் வளர்த்துவந்தான்
4. அதற்கு
ப்போடு
அதற்குப்
போடு
5. தொழிலாளர்
கள்வன்முறையில் போராடு
கிறர்கள்
தொழிலாளர்கள்
வன்முறையில்
போராடுகிறார்கள்.

எழுதுவதிலும் அச்சிடும் நூல்களிலும் மெய்யெழுத்துகள்
இடப்பக்கத்தில் வரக்கூடாது என்றறிக.

கீழேவரும் விதிகள், சொற்றொடர்ப் பிரிப்புத் தவறுகளை
நீக்கப் பயன்படும். அவை வருமாறு:-

1. வினைத்தொகை, பண்புத்தொகை, இருபெயரெட்டுப்
பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை,
வேற்றுமைத்தொகை, உருபும் பயனும் உடன் தொக்க தொகை,
அன்மொழித்தொகை ஆகிய இத்தொகைளைப் பிரித்தலாகாது.
இத்தொகைகள் ஒரு சொல் தன்மையுடையவை. "எல்லாத் தொகையும்
ஒரு சொல் நடைய" (சொல்-420) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

வினைத்தொகை -
பண்புத்தொகை -
இருபெயரொட்டும்
பண்புத்தொகை -
செய்வினை.
பைந்தமிழ்.

கார்த்திகைத்திங்கள்.