பக்கம் எண் :

சொற்றொடர்ப் பிரிப்புத் தவறுகள் 279

உம்மைத்தொகை -
உவமைத்தொகை -
2ஆம் வேற்றுமைத் தொகை -
உருபும் பயனும்
உடன்தொக்க தொகை -
அன்மொழித் தொகை -
செடிகொடி.
மலைத்தோள்.
துணிகட்டு.
தயிர்க்குடம்.
காலாயுதம் கூவிற்று
காலாயுதம்-கோழி. (காலையே ஆயுதமாகக் கொண்டு
போரிடுவது.)

2. வேற்றுமை உருபுகளைச் சேர்த்தெழுதுக

என்னுடைய வீடு, வீட்டிலிருந்து போனார்.

வீட்டில் இருந்து போனார் என்று உருபைப் பிரித்தெழுதினால்
வீட்டில் தங்கிவிட்டுப் போனர் என்று பொருள்படக்கூடும்.

3. இடைச் சொல்லைப் பிரித்தலாகாது.

அவர்தாம் (அவர் தாம் என்று பிரித்தல் கூடாது.)

4. துணைவினையைச் சேர்த்தெழுதுக.

வந்துவிடு, செய்துகொண்டான்.

5. பொருள் வேறுபடுமாயின் சேர்த்தெழுதுக.

பிழை : என் பங்கு நிலம் ஆகவே கொடுத்தான்.

திருத்தம் : என்பங்கு நிலமாகவே கொடுத்தான்.

6. இடம் இல்லாவிட்டால் பொருள் தரும் முறையில் பிரிக்க
வேண்டும். வரவி டாது என்று பிரிக்காமல் வர விடாது என்று
பிரித்தெழுதுக.