பக்கம் எண் :

280நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

7. உடம்படுமெய்யைச் சில இடங்களில் சேர்த்தே எழுதுக.

தவறு
வர இல்லை
வந்த உடன்
திருத்தம்
வரவில்லை
வந்தவுடன்

8. கள் விகுதிகளைக் கூடியமட்டும் பிரிக்காமல் எழுதுக.

பிழை
அவர் கள் கூறினார் கள்
திருத்தம்
அவர்கள் கூறினார்கள்

சேர்த்தெழுத வேண்டிய சொற்றொடர்களைச் சேர்த்தெழுதவே
பழகுக. அச்சுக்கோப்போரும் சேர்க்க வேண்டிய சொற்றொடர்களைப்
பிரிக்காமல் சேர்ந்து வருமாறு அச்சுக் கோக்கப் பழகுதல் வேண்டும்.