|
இவை வாக்கியங்களே. இவற்றில் எழுவாய்கள் இல்லை.
முதலிரண்டு வாக்கியங்களில் நீ என்னும் எழுவாயும், மூன்றாவது
வாக்கியத்தில் நீங்கள் என்னும் எழுவாயும் மறைந்து நிற்கின்றன.
எழுவாய் தோன்றாமல் இருந்தால், அதனைத் தோன்றா எழுவாய்
என்பர். செயப்படுபொருள் சில வாக்கியங்களில் இல்லாமலும்
இருக்கும். கண்ணன் ஓடினான் என்னும் வாக்கியத்தில் செயப்படு
பொருள் இல்லாமல் இருப்பதைக் காண்க. சில வாக்கியங்களில்
ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள்களும் இருக்கும்.
ஆசிரியர், மாசிலாமணிக்குத் தமிழும் கணக்கும் கற்பித்தார்.
இதில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள்கள் இருத்தலைக் காண்க.
எழுவாயைத் தழுவியும் செயப்படுபொருளைத் தழுவியும்
பயனிலையைத் தழுவியும் அடைமொழிகள் இருப்பதுமுண்டு.
இல்லாமலிருப்பதுமுண்டு. இவ்வடைமொழிகள் வாக்கியத்தின்
முழுக்கருத்தை விளக்குவதாகவே இருக்கும். பத்துத் திங்கள் சுமந்து
ஈன்றெடுத்த தாயும் ஒழுக்கம் கெட்ட மகனை மிகவும் விரும்பமாட்டாள்.
இந்த வாக்கியத்தில் அடைமொழிகள் வந்திருதத்தலைக் காண்க. ‘பத்துத்
திங்கள் சுமந்து ஈன்றெடுத்த’ என்னும் தொடர் ‘தாயும்’ என்னும்
எழுவாய்க்குரிய தொடர்; ‘ஒழுக்கம் கெட்ட’ என்னும் தொடர்
‘மகன்’ என்னும் செயப்படு பொருளுக்குரியது; ‘மிகவும்’ என்பது
‘விரும்பமாட்டாள்’ என்னும் பயனிலைக்குரிய அடைமொழி.
தெளிவாகக் கருத்தை தெரிவிப்பதே வாக்கியத்தின் நோக்கமாக
இருத்தல் வேண்டும் என்பதை ஒருவரும் மறத்தலாகாது.
பொருள் மயக்கமும் வாக்கியத்தில் வருதல் கூடாது. "இங்குச்
செய்யப்படும் பண்டங்கள் நெய்யில் செய்யப்பட்டவை அல்ல"
என்று சிற்றுண்டிச்சாலை அறிவிப்பில் பலரும் கண்டு
|