|
2. வினை வாக்கியம்
இது யாருடைய வீடு?
நேற்று நீ வந்தாயா?
3. விழைவு வாக்கியம்
நம் நாடு நீடு வாழி! (வாழ்த்து)
நாளைக்குப் பாடம் படித்து வா. (கட்டளை)
எனக்கு இந்நூலைத் தருக. (வேண்டுகோள்)
நீ ஒழிக. (சபித்தல்)
4. உணர்ச்சி வாக்கியம்
தமிழ் இறந்தபின் தமிழ்மண் மட்டும் இருந்தென்ன!
தலைவ, வருக வருகவே!
அமைப்பு வகை
அமைப்பை ஒட்டி வாக்கியத்தைத் தனி வாக்கியம்
(Simple Sentence) எனவும், தொடர் வாக்கியம்
(Compound Sentence)
எனவும், கலவை வாக்கியம்
(Complex Sentence) எனவும் பிரிப்பது
மற்றொரு வகை. தமிழில் தனி வாக்கியமானது சிறுவாக்கியமாகவும்
இருக்கும்; பல பக்க அளவிற்கு வரக்கூடிய நெடும் பெரு
வாக்கியமாகவும் இருக்கலாம். வினையெச்சத்தின் உதவியாலும்
உம்மையின் உதவியாலும் இராமாயணக் கதையை ஒரு நெடும் பெருந்
தனி வாக்கியமாக எழுதலாம். இக் காலத்தில் நெடும் பெருந் தனி
வாக்கியத்தை யாரும் எழுதுவது இல்லை. அப்படி எழுதினாலும்
யாரும் அதனைப் படித்துப் புரிந்து கொள்வது கடினமாகும். தமிழில்
தொடர் வாக்கியம் என்பது இல்லை; என்றாலும், ஆங்கில முறையைத்
தழுவிக் கருத்துத் தொடர்பை ஒட்டியும் எழுவாயைத் திரும்பத் திரும்பப்
பயன் படுத்துவதைத் தடுக்கும் பொருட்டும் அரைப்புள்ளியின்
|