பக்கம் எண் :

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும் 287


உதவியால் தொடர் வாக்கியத்தை எழுதுகிறோம். கலவை வாக்கியம்
தமிழில் உண்டு. இவ்வாக்கிய வகைகள் பெரிதும் ஆங்கில
வாக்கிய இலக்கணத்தை ஒட்டியவை.

1. தனி வாக்கியம்

ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ ஒரே பயனிலையைப் பெற்று
வருவது தனி வாக்கியமாகும்.

இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

இஃது ஒரே எழுவாய் ஒரே பயனிலையைப் பெற்று வந்த தனி
வாக்கியம்.

இளங்கோ சிலப்பதிகாரத்தையும், சாத்தனார் மணிமேகலையையும்,
திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியையும் இயற்றினார்கள்.

இது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வந்த தனி
வாக்கியம்.

முன்னே குறிப்பிட்டவாறு தனி வாக்கியத்தைச் சிறு வாக்கியமாகவும்
நெடும் பெருந்தனி வாக்கியமாகவும் எழுதலாம். ஆனால், வாக்கியம்
சிறிதாகவும் அளவாகவும் இருந்தால்தான், கருத்துத் தெளிவும் உணர்ச்சி
வேகமும் அமையும். கதைக்கும் நிகழ்ச்சிக் குறிப்புக்கும் சிறு
வாக்கியங்களே பொருத்தமானவை.

2. தொடர் வாக்கியம்

ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள், அதனால், இதனால் என்னும்
சுட்டு முதற் காரணக்கிளவிகளாலோ, ஆகையால், ஏனென்றால்
என்னும் காரணக்கிளவிகளாலோ, எனினும், இருப்பினும் போன்ற
சொற்களாலோ இணைந்துவரினும், கருத்துத் தொடர்பால்
இணைக்கப்பட்டுவரினும். அவ்வாறு வருவதைத் தொடர் வாக்கியம்
எனலாம். வேறுவிதமாகக் கூறினால், ஒவ்வொன்றும் தனித்தனியாக
இயங்கக் கூடியதாயிருப்பினும். கருத்துத் தொடர்பால் இணைக்கப்
பட்டிருப்பின், அதனைத் தொடர்