வாக்கியம் என்று சொல்லலாம். ஒரே எழுவாய் பல பயனிலைகளைக்
கொண்டு முடிவதும் தொடர் வாக்கியமாகும். பலர்க்குத் தொடர்
வாக்கியம் என்பது இப்படியிருக்கும் என்று விளங்காதிருப்பதால்
34 எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்பட்டுள்ளன.
1. அக்பர் பேரரசர் மட்டுமல்லர்; ஆட்சித் திறமையும்
மிக்க பேரறிஞர்.
2. உண்மைத் துறவி விரும்பினால் ஒரு வேளை உணவு
உண்பார்; விரும்பாவிட்டால் சில நாள்கள் உண்ணாமலும்
விரதம் இருப்பார்.
3. நான் மதுரைக்குப் போனேன்; போனதும், எனக்குக்
கடுமையான காய்ச்சல் கண்டதால், உடனே சென்னைக்குத்
திரும்பிவிட்டேன்.
4. அம்மாணவன் பாடங்களை ஒழுங்காய்ப் படிப்பதில்லை;
அதனால், தேர்வில் வெற்றி பெறவில்லை.
5. வெயில் கடுமையாய் இருந்தது; எனினும், நாங்கள் அந்த
வெயிலில் வெளியே சென்றோம்.
6. உன்னிடம் இரண்டு இலக்கண நூல்கள் உள; அவற்றுள்
ஒன்றை எனக்குக் கொடு.
7. கதிரவன் தோன்றியது; ஆகையால், பனி மறைந்தது.
8. சீடர்கள் குதிரையைக் கண்டு பிடித்தார்கள்; ஆனால்
அதைக் கண்டு துயருற்றார்கள்; ஏனென்றால், அதன் கால்
முடமாகி இருந்தது.
9. கண் களவு கொள்ளும் சிறு நோக்கு, காதலுக்குச் செம்பாக
மன்று; மிகப் பெரிது.
10. அவன் செய்தது எவருக்கும் நன்மை செய்யாது;
தீமையே செய்யும்.
11. அரசன் அரியணையில் இருந்தான்; அவனோடு
அரசியும் இருந்தாள்.
|