|
12. காமராசரது நற்றொண்டை நாடும் மறவாது; நற்றமிழரும்
மறவார்.
13. தென்னைக்குக் கிளைகள் கிடையா; மட்டைகளே உண்டு.
14. பயனிலை வினைமுற்றாக இருக்கலாம்; பெயர்ச் சொல்லாக
இருக்கலாம்; வினாவாகவும் இருக்கலாம்.
15. இவ்வூரில் நன்செய் நிலமும் உண்டு; புன்செய் நிலமும் உண்டு.
16. பொறுமைக் குணம் பெண்களுக்கு மட்டும் வேண்டுதன்று;
ஆண்களுக்கும் வேண்டுவதுமாகும்.
17. இக்குற்றம் கண்டிக்கப்பட வேண்டுவது மட்டுமன்று;
தண்டிக்கபட வேண்டுவதுமாகும்.
18. நான் வருவேன் என்றேன்; வந்துவிட்டேன்.
19. எதையும் செய்; ஆனால், நன்றாகச் செய்.
20. நான் ஒன்றை நினைக்கிறேன்; ஆனால், மற்றொன்றைச்
செய்கிறேன்.
21. சிறுவன் நாயின்மேல் கல்லெறிந்தான்; கல் பட்டிருந்தால்
அவனை அது கடித்திருக்கும்.
22. அவன் இன்று வருவான்; இல்லாவிட்டால் நாளைக்கு
வருவான்.
23. குமரனுக்குப் படிக்க விருப்பமும் இல்லை; வாழ்வில்
சிறந்து விளங்க எண்ணமும் இல்லை.
24. என் குழந்தையைக் கண்டுபடித்துக் கொண்டு வந்து
என்னிடம் விட்டவனுக்கு நன்றியும் கூறினேன்; அன்பளிப்பாக
ஐம்பது ரூபாயும் கொடுத்தேன்.
25. அவன் ஓட்டப் பந்தயத்தில் ஓடினால் வெற்றிபெற
மாட்டான்; தோற்றுப் போவதைக் குறைவாகவும் கருதமாட்டான்.
26. அம்மன்னன் அந்நாட்டின் மீது படையெடுக்கவுமில்லை;
அதனைக் கைப்பற்ற விரும்பவுமில்லை.
|