|
27. வேகமாக நட; இல்லாவிட்டால் வண்டி வருவதற்குள்
இரயில் நிலையத்தை அடைய முடியாது.
28. கப்பலில் காணாமற் போனவன் கடலில் விழுந்திருக்க
வேண்டும்; அல்லது எந்தக் கப்பலாவது அவனைக் காப்பாற்றியிருக்க
வேண்டும்.
29. நான் வீட்டுக்குப் போய்விட்டேன்; ஏனென்றால், எனக்கு
வயிற்றுவலி வந்துவிட்டது.
30. நானும் வருகிறேன்; நீயும் போ.
31. சமயம் என்பது நன்னடத்தை; வெறும் நம்பிக்கை அன்று.
32. நாங்கள் போராடுவது பொன்னுக்கு அன்று; புகழுக்கும்
அன்று; உரிமைக்கே ஆகும்.
33.அன்று நடந்த விளையாட்டு விறுவிறுப்பாய் இருந்தது;
நினைப்பூட்டும்படியாய் இருந்தது. எண்ணக் கவர்ச்சியுடையதாய்
இருந்தது.
34. ஒருவன் உண்மையாக அடையவேண்டிய அறம் துறவறம்
அன்று; இல்லறமே.
3. கலவை வாக்கியம்
கலவை வாக்கியம் என்பது பல வாக்கியங்கள் கலந்த ஒரு
வாக்கியமாக அமைவது. இதில் ஒன்று முதன்மை வாக்கியமாக இருக்கும்;
மற்றது சார்பு வாக்கியமாக இருக்கும். சிலவற்றில் ஒன்று முதன்மை
வாக்கியமாகவும் மற்றவை சார்பு வாக்கியங்களாகவும் இருக்கும்.
வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்றும், சிக்கல்
ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும்
அறிஞர் அறிவுரை கூறுவர்.
சேகவன் வந்து கள்வர்கள் பொருள்களைத் திருடிச் சென்றார்கள்
என்றும், பிடிப்பதற்குள் அவர்கள் ஓடி விட்டார்கள் என்றும் கூறியதும்,
நான் அத்திருடர்களைப் பிடிப்பதற்கு விரைந்து வந்து வண்டியில்
சென்றேன்.
|