பக்கம் எண் :

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும் 291

முதல் வாக்கியத்தில் இருக்கும் "அறிஞர் அறிவுரை கூறுவர்"
என்பது முதன்மை வாக்கியம்; "வாழ்க்கை இன்பமும் துன்பமும்
கலந்தது" என்பதும், "சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை
நடத்த வேண்டும்" என்பதும் சார்பு வாக்கியங்கள். இரண்டாவது
வாக்கியத்தில் உள்ள "நான் அத்திருடர்களைப் பிடிப்பதற்கு விரைந்து
வந்து வண்டியில் சென்றேன்" என்பது முதன்மை வாக்கியம்; மற்றவை
சார்பு வாக்கியங்கள். கலவை வாக்கியங்களில் பலவகை உண்டு.

4. தொடர் கலவை வாக்கியம்

இப்போது நான்காவது வகை வாக்கியம் ஆங்கிலத்தில்
சொல்லப்படுகிறது. ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ நிறுவனம் வெளியிட்ட
‘மிக நன்றாக எழுதுக; மிக நன்றாகப் பேசுக’
(‘Write Better; Speak Better’)
என்னும் ஆங்கிலப் பெருநூல் ஒன்று புதிதாகத் தொடர் கலவை
வாக்கியம் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இத்தகைய வாக்கியம்
தமிழிலும் எழுதுவதைக் காண்கிறோம்.

1. திறனாய்வாளர்கள் நன்கு புகழ்ந்திருக்கிறார்கள் என்று
கூறுமளவு வெற்றி பெற்றுள்ள பெரும்பாலனவாகிய நவீனங்கள்
பொதுமக்களால் புறக்கணிக்கப்படுகின்றன; அவற்றுள் பல
திரைப்படமாக்க ஹாலிவுட் நிறுவனத்துக்கு விற்ற உரிமையை மீட்டுக்
கொண்டிருப்பினும், விற்பனை வகையில் தோல்வியுற்றிருக்கின்றன.

2. அங்கு வந்தவள் என் தங்கை என்றும், அவளை அங்கிருந்த
மாணவன் ‘கேலி’ செய்தான் என்றும் அறிந்ததும், நான் அந்த
மாணவனிடம் சென்று, "நீ அப்பெண்ணை எப்படிக் ‘கேலி’ செய்யலாம்?"
என்று கேட்டு வைதேன்; காவற்கூடத்துக்கு அவனை இழுத்துச்
சென்று காவலரிடம் ஒப்படைத்தேன்.

3. திருவள்ளுவர் முதல் முதலாக நீதிக்கருத்துகளைக்
குறட்பாவில் அமைத்துத் திருக்குறளை இயற்றினார் என்று
கருதுவதனால், அவரைஅறிஞர்கள் முதற் பாவலர் என்று குறிப்பிடுவது
பலரும் அறிந்த செய்தி என்று நான்