பக்கம் எண் :

292நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை; நீங்களே அறிவீர்கள்.

கலவை வாக்கியங்களிலும் தொடர்வாக்கியம் கலந்து வருவதால்
இத்தகைய வாக்கியங்கள் தொடர் கலவை வாக்கியங்கள் எனப்படும்.

கலந்தெழுதுவதன் நலன்

பல வகை வாக்கியங்களைக் கலந்து எழுதினால்தான்
கட்டுரையோ கதையோ சுவையாக இருக்கும். சிறு வாக்கியங்களுக்கு
வேகம் உண்டு. பெருவாக்கியங்களுக்கோ ‘கம்பீரம்’ உண்டு.
பொருளுக்கு ஏற்றவாறு வாக்கியங்கள் அமையும். எனவே,
வாக்கியங்களைப் பிழையின்றி எழுதிப் பழக வேண்டும்.

வாக்கியங்களை வழுவின்றி எழுதுவதற்கு எழுவாய், பயனிலை,
செயப்படுபொருள் அமையும் முறையையும், எழுவாய் ஏற்ற
பயனிலையைக் கொண்டு முடியும் முடிபையும், வாக்கிய
அமைப்புக்குரிய இலக்கணங்களையும் தெரிந்து கொள்வது
இன்றியமையாதது.

எழுவாய் முதலியவை காண வழிகள்

எழுவாய் என்பது தலைமையான கருத்து எழுவதற்கு இடமாக
இருப்பது.

பயனிலை என்பது எழுவாயின் பயனைத் தன்னிடத்தே
நிலைத்திருக்கச் செய்வது.

செயற்படுதற்கு உரியதாக உள்ள பொருள் செயப்படுபொருள்.

‘கந்தன் திருக்குறள் படித்து வருகிறான்".

இதில் எழுவாயாக இருப்பது கந்தன் என்னும் சொல்.

‘பறவை கூடு கட்டுகிறது’

என்னும் வாக்கியத்தில் பறவை என்பது எழுவாயாகும்.