இருக்கலாம்; வினாவாகவும் இருக்கலாம்; வினைமுற்றாகவும்
இருக்கலாம்.
தமிழில் பெயர், வினைமுற்று, வினா என்பவை பயனிலையாக
வரும் என்றறிக.
1. அவன் கண்ணன், அது சேவல்.
கண்ணன், சேவல் என்பவை பெயர்ப் பயனிலை.
2. தலைவர் பேசுகிறார். கோழி கூவிற்று.
பேசுகிறார், கூவிற்று என்பவை வினைப் பயனிலைகள்.
இங்கு வினைமுற்றுகள் பயனிலைகளாக வந்துள்ளன.
3. அவன் யார்? அது யாது?
இங்கு யார், யாது என்னும் வினாப் பெயர்கள் பயனிலைகளாக
வந்துள்ளன.
இனி எழுவாய் பற்றியும் பயனிலை பற்றியும் சிறிது விரிவாகக்
காண்போம்.
எழுவாய் பற்றி
1. உயர்திணை எழுவாயுடன் ஆனவன், ஆனவள், ஆனவர்,
என்பவன், என்பவள், என்பவர் என்னும் சொல்லுருபுகளையும்;
அஃறிணை எழுவாயுடன் ஆனது, ஆனவை, என்பது, என்பவை
என்னும் சொல்லுருபுகளையும் சேர்த்தெழுதுவதுண்டு.
கால்டுவெல் என்பவர் திராவிட மொழி ஒப்பிலக்கணம்
இயற்றினார்.
மற்றச் சொல்லுருபுகளையும் இவ்வாறு சேர்த்தெழுதுவதுமுண்டு.
2. பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர்,
பண்புப் பெயர், தொழிற் பெயர், வினையாலணையும் பெயர்,
|