பக்கம் எண் :

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும் 295


சுட்டுப்பெயர், முன்னிலைப்பெயர், தன்மைப்பெயர், படர்க்கைப் பெயர்
முதலியவை எழுவாயாக வரும்.

பசுமை கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்,

பண்புப் பெயர் எழுவாயாய் வந்துளது.

நடத்தல் நல்ல உடற்பயிற்சி ஆகும்.

தொழிற்பெயர் எழுவாயாய் வந்துளது.

வந்தவர் போனார்

வினையாலணையும் பெயர் எழுவாயாய் வந்துளது.

காளை வந்தான். (காளை-காளை போன்றவன்)

உவமையாகு பெயர் எழுவாயாய் வந்துளது.

அவன் சென்றான். அது பறந்தது.

சுட்டுப் பெயர் எழுவாயாய் வந்துளது.

மற்றவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை;
நீங்கள் அறிந்தவை.

3. பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை,
வேற்றுமைத் தொகை, உருபும் பயனும் உடன் தொக்க தொகை,
உவமைத் தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை,
அன்மொழித்தொகை ஆகியவையும் எழுவாயாக வரும்.

கருங்குதிரை ஒடிற்று.

பண்புத்தொகை எழுவாயாய் வந்துளது.

பலாமரம் விழுந்தது.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை எழுவாயாய் வந்துளது.

யானைத் தந்தம் கிடைத்தது.

6-ஆம் வே. தொகை எழுவாயாய் வந்துளது.

மலைப்பாம்பு செத்தது.