|
7-ஆம் வே. உருபும் பயனும் உடன் தொக்க தொகை
எழுவாயாய் வந்துளது.
மதிமுகம் வியர்த்தது.
உவமைத்தொகை எழுவாயாய் வந்துளது.
உயிர்மெய், 216 எழுத்துகளை உடையது.
உம்மைத் தொகை எழுவாயாய் வந்துளது.
(உயிர்மெய்-உயிரும் மெய்யும் கூடிய எழுத்து.)
கொல்யானை நிற்கிறது.
வினைத்தொகை எழுவாயாய் வந்துளது.
தேன்மொழி பாடினாள்.
அன்மொழித்தொகை எழுவாயாய் வந்துளது.
4. சில வாக்கியங்களின் எழுவாய் மறைந்திருக்கும்.
மறைந்திருக்கும் எழுவாயைத் தோன்றா எழுவாய் என்பர்.
அறஞ்செய விரும்பு.
இவ்வாக்கியத்தில் நீ என்பது மறைந்திருக்கிறது.
ஒருவரை ‘இவர் யார்? என்று வினவும்போது கேட்கப்பட்டவர்
‘நண்பர்’ என்று கூறுகையில், இவர் என்னும் எழுவாய்
மறைந்திருக்கிறது. இவ்வாறு தோன்றாமல் இருக்கும் எழுவாயைத்
தோன்றா எழுவாய் என்பர்.
பயனிலை பற்றி
பயனிலை, பெயராகவும் வினைமுற்றாகவும் வினாவாகவும்
இருக்கும் என்று கண்டோம்.
வினைமுற்றானது தெரிநிலை வினைமுற்றாகவும் இருக்கலாம்;
குறிப்பு வினைமுற்றாகவும் இருக்கலாம்.
|