|
கந்தன் வந்தான்
வந்தான் என்னும் தெரிநிலை வினைமுற்று, பயனிலையாய்
வந்துளது.
பணம் இல்லை.
இல்லை என்னும் குறிப்பு வினைமுற்று பயனிலையாய்
வந்துளது.
சில வினா வாக்கியங்கள் வினா எழுத்துகளைக் கொண்டு
வினா வடிவத்தோடு தெரிநிலை வினைமுற்றாகவோ குறிப்பு
வினைமுற்றாகவோ வருவதுண்டு.
(1) அது வருமா? அவன் போனானா?
இவை தெரிநிலை வினைமுற்றுகள். ஈற்றில் வினா எழுத்துப்
பெற்று முடிந்த வினா வாக்கியங்கள்.
அவள் பொன்னம்மாளா?
இது வினா எழுத்துச் சேர்ந்து வந்துள்ள பெயர்ப் பயனிலை
பெற்று முடிந்த வினா வாக்கியம்.
(2) காசு இல்லையா? உன் பேச்சு இனிதா?
இவை குறிப்பு வினைமுற்றுகள், வினை எழுத்துப் பெற்று
முடிந்த வினை வாக்கியங்கள்.
சில வாக்கியங்களில் பயனிலை முன்னும் எழுவாய் பின்னும்
மாறி வருவதுமுண்டு.
வந்தான் கந்தன். யார் அவர்?
வாக்கியம் எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் வருதல்
1. சில வாக்கியங்களில் ஒரு வாக்கியமே எழுவாயாக
வருவதுண்டு.
‘தொண்டுக்கு முந்து; தலைமைக்குப் பிந்து’ என்பது ஒரு
சிறந்த கருத்து.
|