|
இதில் ஒரு வாக்கியமே எழுவாயாய் வந்துளது. இதனை
எழுவாய்க்கு வந்த அடைமொழி என்பர்.
2. சில வாக்கியங்களில் செயப்படுபொருளும் ஒரு
வாக்கியமாய் இருப்பதுண்டு.
நீ ‘செல்லப்பன் நல்லவன்’ என்பதைத் தெரிந்து கொள்க.
இதில் ஒரு வாக்கியமே என்பதைத் தெரிந்து கொள்க.
இதில் ஒரு வாக்கியமே செயப்படுபொருளாய் வந்துளது.
தமிழ் இலக்கணம் இதனைச் செயப்படுபொருளுக்கு வந்துள்ள
அடைமொழி என்று குறிப்பிடும்.
தமிழ் வாக்கியத் தனிச்சிறப்பு
தமிழ் வாக்கியம் தமிழன் எண்ணுகிறவாறு அமைந்திருக்கும்.
கந்தன் என்றோ, பறவை என்றோ முதலில் எண்ணுவது முதலில்
இருக்கும். அஃதாவது எழுவாய் முதலில் இருக்கும்.
இரண்டாவது எண்ணுவது எதைச் செய்தான் அல்லது எதைச்
செய்தது என்பது. ஆதலால், செயப்படுபொருள் இரண்டாவதாக
இருக்கும்.
என்ன செய்தான் அல்லது என்ன செய்தது என்று
எண்ணுவது இறுதியிலாதலால் பயனிலை இறுதியில் இருக்கக்
காண்கிறோம். பயனிலை இறுதியில் இருத்தல் உளத்தியல் முறை.
தமிழ் வாக்கியம் தருக்க முறையில் அமைந்திருப்பதாக
ஐரோப்பிய அறிஞர்கள் கருதுகிறார்கள். சிலேட்டர் என்பார்,
"திராவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் மக்கள் பேசுமொழிக்குரிய
தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ்மொழி; தருக்க
|