பக்கம் எண் :

302நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

2. "அப்படி நான் ஒன்றும் சொல்லவில்லை" என்றான்
உரத்த குரலில்.

3. "பெண் வேடத்தைப் போட்டு நடிக்க வேண்டுமென்று
எங்கள் சங்கத் தலைவர் என்னை வற்புறுத்துவார் என்று அஞ்சிக்
கொண்டிருந்தேன்" என்றான் சாரங்கன் கொஞ்சம் கூடச் சிரிக்காமல்.

4. நகரத்தில் வாழும் ஒருவன் பிறப்பது ஒரு குடும்பத்தில்;
விளையாடி வளர்வது பல்வேறு குடும்பச் சிறுவர்களுடன்; கல்வி
பயில்வது வெவ்வேறு பண்புகளோடு வெவ்வேறு இடங்களிலிருந்து
வந்து கற்கும் பிள்ளைகளுடன்; பொழுது போக்குவதும் இவ்வாறே
வேறு வேறு இளைஞர்களுடன்; கல்லூரி முதலியவற்றில் கற்பதோ
மூலை முடுக்களிலிருந்து வரும் பல பழக்க வழக்கமுடைய
மாணவர்களுடன்; கற்பதோ எங்கெங்கோ வாழ்ந்து எவ்வெவ்வாறோ
உணர்ந்த ஆசிரியர்களிடம்.

5. மக்களுக்கு எப்படித் தெரியும் அந்தக் கவிஞனுக்கு
ஏற்பட்ட தலைக்குனிவும், உண்டாக்கப்பட்ட சோதனையும்,அவன்
அடைந்த வேதனையும்?

6. இந்த நிலையின்தான் இருந்தேன் ‘திருடாதே’ என்ற அந்தச்
சமூகப்படம் வெளி வந்து மக்களால் நான் பாராட்டப்பெற்ற அந்த
நேரத்தில்.

7. பழுப்பு நிறத்தில் இரண்டு குருவிகள் உட்கார்ந்திருக்கின்றன
கோபுரத்தின் மீது.

8. முல்லை அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள் தன்
சிவந்துபோன முகத்தில் நாணம் சூழ.

9. கணீரென்ற குரல் வாய்ந்திருந்தது பாடியவனுக்கு.

10. எல்லாரும் வியந்தனர் அந்தப் பெரிய உரையாடலை நான்
மனப்பாடம் செய்து ஒழுங்காய் ஒப்பித்தது குறித்து.