|
11. இந்த ஒன்று போதாதா அவர்கள் திட்டமிட்டு ஆற்றும்
பணிக்குச் சான்று கூற?
12. "ஏண்டா, தம்பி" என்கிறார் மாமா பதறிக்கொண்டு.
13. வெற்றி கண்டேன் வாதாடி.
14. அப்போது செய்த குற்றத்திற்கு ஆளாகக் கூடாது
என்பதில் கவனமாயிருக்கிறான் இப்போது.
15. அன்று எனக்குத் தெரியும் அவள் ஏதோ சூழ்ச்சி
செய்கிறாள் என்று.
16. சிறிதும் நான் எதிர்பார்க்கவில்லை அவன் கடிதம் எனக்கு
எழுதுவான் என்று.
17. அப்பொழுதே நான் சொன்னேன், "அப்பா! இந்த
இடம் நமது நிலைமைக்குத் தகாது" என்று.
18. சடக்கு என்று நிற்கிறது வண்டி, "நிறுத்து, நிறுத்து"
என்கிற குரல் கேட்டு.
19. ‘ஒரு பொறுப்புள்ள கணவன் எப்படி நடந்து கொள்ள
வேண்டுமோ அப்படித்தான் என் கணவர் என்னிடம் நடந்து
கொள்கிறார்’ என்றாள் தேன்மொழி முகமலர்ச்சியுடன்.
20. ‘மிகுந்த நன்றி’ என்றான், அவன் வீட்டில் திறவு கோலைக்
கையில் வாங்கிக் கொண்டு.
21. நடன ஆசிரியர் அப்பெண் வீட்டுக்கு மாலை 5 மணிக்கு
வந்து இறங்கினால் ஏழு ஆகிவிடும் அவர் வீட்டை விட்டுக்
கிளம்ப.
22. ஆந்திர முதலமைச்சரும் கருநாடக முதலமைச்சரும் இரண்டு
இரண்டு தொகுதிகளுக்கும் விண்ணப்பம் கொடுத்தார்கள்.
‘இத்தகைய மறுமலர்ச்சி வாக்கியங்களை எழுதலாமா?’ என்னும்
வினா எழுகிறது.
|