24.
வாக்கிய அமைப்பில் அறிய வேண்டுவன
நல்ல தமிழ் எழுத வல்லவராதற்கு வாக்கிய அமைப்பைப் பற்றி
அறியும் அறிவு இன்றியமையாதது என்று சொல்லவேண்டுவதில்லை.
வாக்கிய அமைப்பு ஒரு மொழியின் உயிர். எண்ணத்தின் போக்கை
நேரே உணர்த்துவது வாக்கியம் அமைப்பே ஆகும். பிறமொழியை
நன்கு கற்க விரும்புவோர் யாவர்க்கும் வாக்கிய அமைப்புப் பற்றிய
அறிவு வேண்டப்படுவதாகும்.
"இந்தத் தொல்லை எதற்கு? தமிழனுக்குத் தமிழ் வாக்கிய
அமைப்பபை பற்றி ஏன் தெரிய வேண்டும் பேசத் தெரிந்து விட்டால்
எழுதத் தெரிந்து கொள்கிறான். இதைத் தெரிந்து கொள்வதால் நல்ல
முறையில் எழுதத் தடை ஏற்படுமேயன்றி நன்மை ஏற்படாது" என்று
இலக்கண வெறுப்பாளர் சிலர் கூறிக்கொண்டும் எழுதிக்கொண்டும்
வருகின்றனர். அக்கூற்றுப் பொருந்துமாறில்லை. அக்கூற்றைப்
பரப்புவோர் இலக்கணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி அலறி ஆயிரம்
கல் தொலைவில் ஓடி மலைக்குகையில் வாழ்கின்றவர்களாவர். இதனால்,
பல நாளிதழ்களும் வார வெளியீடுகளும் தவறான வாக்கியங்களை
எழுதித் தமிழைக் கெடுத்து வருவதன்றித் தவறான வாக்கியங்களைப்
பலர் எழுதக் கற்குமாறு செய்து. அறிவியல் முறையில் அமைந்த
தமிழ் மொழிக்குக் கேடு புரிகின்றன. இத வாலிழந்த ஒரு நரி பிற
நரிகளையும் வாலிழக்குமாறு வற்புறுத்திய கதை போல இருக்கிறது.
அவர்களது கூற்று மிகத் தவறானது என்பதை நினைவு படுத்த
விரும்புகிறேன். மிகுதியான இலக்கண விதிகளைப் புகுத்தி விளங்காத
முறையில் எழுதுவது கூடாது என்பதைப் பலரும் ஒப்புக்கொள்வர்.
அதே நேரத்தில் நடைமுறைக்கு ஏற்றவாறு
ந21
|