|
து, று என்பவை அஃறிணை ஒருமை வினைமுற்று விகுதிகள்.
இவற்றை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் என்பர். ‘வண்டி வந்து
சேர்ந்தது’ என்னும் வாக்கியத்தில் ‘வண்டி’ என்னும் ஒருமை
எழுவாய்க்கு ஏற்றவாறு ‘து’ விகுதி வந்திருப்பது அறிக. ‘கோழி
கூவிற்று’ என்னும் வாக்கியத்தில் ஒருமை எழுவாய்க்குப் பொருந்தும்படி
‘று’ விகுதி வந்திருப்பது காண்க.
‘அ’ என்பது பலவின்பால் வினைமுற்று விகுதி. ‘வண்டிகள்
வந்து சேர்ந்தன’, ‘கோழிகள் கூவின’, - இந்த இரண்டு வாக்கியங்களிலும்
பன்மை எழுவாய்களுக்கு இசையுமாறு ‘அ’ வினைமுற்று விகுதியாக
இருக்கக் காண்க. இந்த ‘அ’ விகுதி உடன்பாட்டில் அஃதாவது ஒப்புக
கொள்வதில் வந்துள்ளது.
‘வண்டிகள் வந்து சேரா’, ‘கோழிகள் கூவா’, - இந்த
வாக்கியங்களில் எதிர்மறையில் அஃதாவது எதிர் மறுத்துக் கூறுவதிற்
பன்மை எழுவாய்க்கு ‘ஆ’ வினைமுற்று விகுதியாக வந்திருக்கக் காணலாம்.
இந்த ‘ஆ’ விகுதி பலவின்பால் எதிர்மறை வினைமுற்று விகுதியாகும்.
|
ஒன்றன்பால் உடன்பாடு |
பலவின்பால் உடன்பாடு |
1. போர் நாட்டைப்
பாழாக்குகிறது. |
1. போர்கள் நாட்டைப்
பாழாக்குகின்றன. |
2. கட்சிச் சண்டை பிளவை
உண்டாக்குகிறது. |
2. கட்சிச் சண்டைகள்
பிளவை
உண்டாக்குகின்றன. |
|
ஒன்றன்பால் எதிர்மறை |
பலவின்பால் எதிர்மறை |
|
1. செய்தி வாராது. |
1. செய்திகள் வாரா. |
|
2. விடுமுறை இராது. |
2. விடுமுறைகள் இரா. |
இச் சிறிய இலக்கண அறிவால் இத்தகைய தவறுகளை
எளிதாக நீக்கிவிடலாம். இதற்காக நன்னூலும் படிக்க
வேண்டுவதில்லை. தொல்காப்பியமும் கற்க வேண்டுவதில்லை.
|