பக்கம் எண் :

312நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

திருவள்ளுவர் திருக்குறளில் இப்படிப் பாடியிருந்தலைக்
காணலாம்.

"எவ்வ துறைவ துலகம் உலகத்தோ(டு)
அவ்வ துறைவ தறிவு".

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு".

ஒருவர் எங்ஙனம் பேசுகிறாரோ அங்ஙனம் நடந்து காட்ட
வேண்டும்.

‘எப்படி’ என்று தொடங்கி ‘அவ்வாறு’ என்று எழுதுவதைப்
பல்லாயிரக்கணக்காகப் பார்க்கலாம். இத்தவறு ஒழிய வேண்டும்.

10. ஒரு நாய், ஓரு அணா என்று எழுதுதல் இன்னோசை
பயக்கும்.

வரு மொழி உயர்மெய்யெழுத்தில் தொடங்கினால் ஓரு
என்னுஞ் சொல்லையும். வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால்
ஓர் என்னுஞ் சொல்லையும் பயன்படுத்துக. செய்யுளில் யாப்பிலக்கணம்
கருதி இவ்விதி மாறுபட்டும் வரும்.

இவ்விதியையே இருமடங்கு ஈருடல் என்பவற்றிற்கும் கொள்க.
தொல்காப்பியர் இருவிதியை ‘முதலீரெண்ணின் முன்’ என்னும்
எழுத்ததிகார 455வது நூற்பாவில் கூறுகிறார் என்றறிக.

11. அது போயிற்று, அஃது இல்லை.

இவ்வெடுத்துக்காட்டுகளைக் காண்க. வருமொழி உயிர்மெய்யில்
தொடங்கினால் அது, இது, எது என்னும் சொற்களையும், வருமொழி
உயிரெழுத்தில் தொடங்கினால் அஃது, இஃது, எஃது என்னும்
சொற்களையும் பயன்படுத்தி எழுதுக.