பக்கம் எண் :

314நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


பொருள்கள் எல்லாம் அழிந்தன. இங்கு எல்லாம் என்னும் சொல்
பன்மைப் பொருளைத் தருகிறது.

14. இவனுக்குக் கண்ணன் என்று பெயர். இது தவறு. ‘இவனுக்குக்
கண்ணன் என்பது பெயர்’ என்றிருக்க வேண்டும். ‘இவனுக்கு கண்ணன்
என்று பெயர் கூறுவர்’ என்றாவது வாக்கியம் அமைய வேண்டும்.

15. முக்காலங்களுக்கும் உரிய இயற்கையை நிகழ்காலத்தால்
கூறுவது.

முக்காலத்துக்கும் உள்ளதாகிய இயல்புடைய எல்லாப்
பொருளையும் இறந்தகாலச் சொல்லாலும் எதிர்காலச் சொல்லாலும்
சொல்லாது, இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன்னுள்
அகப்படுத்தி மூன்று காலங்களுக்கும் பொதுவாய் நிற்கும் செய்யும்
என்னும் வாய்பாட்டு வினைச் சொல்லால் சொல்ல வேண்டும் என்று
சொல்லதிகரத்துக்கு உரை எழுதிய சேனாவரையரும்
நச்சினார்க்கினியாரும் கூறுகின்றனர். அவர்கள் காட்டும்
எடுத்துக் காட்டுகள் கீழ்வருபவை.

மலை நிற்கும்.

தீச்சுடும்.

திங்கள் இயங்கும்.

"தீச்சுடும் என்றால் பண்டும் இன்றும் மேலும் சுடும்
என்பதனை விளக்கியவாறு என்று நச்சினார்க்கினியர் கூறுவதோடு,
இது நிகழ்காலச் சொல்லோடு ஒவ்வாமையை உணர்த்தும்" என்று
கூறுகிறார். சேனாவரையர் செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொல்
நிகழ்காலச் சொல்லாயினும் ஒருவாறு பொதுச் சொல்லேயாகும்
என்று குறிப்பிடுகிறார். நன்னூல் ஆசிரியர் "முக்காலத்தினும் ஒத்த
இயல்பொருளை நிகழ்