காலத்தில் கூறுவர்" என்கிறார். நன்னூல் உரையாசிரியர்களுள்
ஒருவராகிய இலக்கண அறிஞர் இராமானுசக் கவிராயர், ‘தீச்சுடும் மலை
நிற்கும்’ என்று எழுதுவதோடு "மலை நிற்கிறது, நிலம் கிடக்கிறது"
என்றும் கூறலாம் என்னுங் கருத்தைத் தெரிவிக்கிறார். நன்னூலுக்கு
உரை இயற்றிய ஆறுமுக நாவலரும் சடகோப இராமானுஜ
ஆச்சாரியாரும், "முக்காலங்களிலும் ஒரு தன்மையாய் நடக்கின்ற
பொருள்களை நிகழ்காலத்தினால் சொல்ல வேண்டும்" என்றே
பொருள் கண்டு, "மலை நிற்கிறது. தெய்வம் இருக்கின்றது"
என்றே எடுத்துக்காட்டுகள் தந்திருக்கிறார்கள்.
சொல்லதிகாரத்திற்குத் தெளிவுரை இயற்றிய மகாகவி அ.கு.
ஆதித்தர், "கிறு என்னும் நிகழ்கால இடைநிலையைப் பயன்படுத்தி
நிகழ்கால வினைமுற்றால் முக்காலத்துக்கு ஒத்தியல் பொருளைக்
கூறுவதே முறையானது" என்று உதாரணங்களைக் காட்டுகிறார்
அவை வருமாறு:
மக்கள் பிறக்கிறார்கள். இறக்கிறார்கள்
பூமி சுழல்கிறது.
சர்க்கரை இனிக்கிறது.
முக்காலத்துக்கு ஒத்தியல் பொருளை நிகழ்காலத்தால்
கூறுவது பொருத்தமாகும். ஆங்கில இலக்கணமும் இக்கருத்தை
ஆதரிக்கிறது. The Sun rises in the east.
16. புலிபோல் பூனை இருந்தது. இங்குப் போல் என்றிருப்பது
சரி. போல் என்பது உவம உருபு. அவன் புலிபோலப் பாய்ந்தான்.
இங்குப் போல என்றே வரவேண்டும். இங்குப் ‘போல’ என்பது
இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்.
|