|
அது கிழக்கே மைதானத்தாலும், மேற்கே குளத்தாலும்,
தெற்கே வயல்களாலும், வடக்கே புன்செய் நிலத்தாலும்
சூழப்பட்டிருக்கிறது என்று திருத்துக. எண்ணும்மைகளோடு மூன்றன்
உருபுகள் வருதலே பொருத்தம். மேலும் கிழக்குக்கு எதிராக மேற்கும்,
தெற்குக்கு எதிராக வடக்கும் வருவதே தகுதியாகும்.
16. பஞ்ச பாண்டவர்களில் அருச்சுனனே வில் வீரன்.
பஞ்ச பாண்டவர்களுள் அருச்சுனனே வில் வீரன் என்று
திருத்துக. பிரித்துக் காட்டுவதற்கு உள் விகுதியையே பயன்படுத்தல்
வேண்டும்.
17. ஒவ்வொரு பள்ளியிலும் ஒன்று அல்லது இரண்டு குழாய்கள்
இருந்தது.
இது தவறான வாக்கியம்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொன்று அல்லது இரண்டு இரண்டு
குழாய்கள் இருந்தன என்றிருக்க வேண்டும். இரண்டு குழாய்கள் என்னும்
பன்மை எழுவாய் அருகில் இருப்பதால் அதற்கு ஏற்றுவாறு வினைமுற்று
இருக்க வேண்டும் என்பது ஆங்கில மொழியில் காணப்படும்
விதியாகும். அதையே நாமும் பின்பற்ற வேண்டும்.
18. ஐம்பது நாடுகளுக்கு மேல் இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
நாடுகள் ஐம்பதிற்கு மேல் இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளன என்று
திருத்துக.
நூல் நிலையத்தில் எண்பதினாயிரம் புத்தகங்களுக்கு மேல்
இருக்கிறது.
நூல் நிலையத்தில் புத்தகங்கள் எண்பதினாயிரத்துக்கு மேல்
இருக்கின்றன என்றெழுதுக.
|