|
அவருக்குத் தொண்ணூறு வயதுக்கு மேலாயிற்று.
அவருக்கு வயது தொண்ணூற்றுக்கு மேல் ஆயிற்று
என்று திருத்துக.
எழுவாய் வருவதற்காக இவ்வாறு வாக்கியங்களைத் திருத்த
வேண்டும்.
19. அவன் அவற்றையெல்லாம் பார்த்தான்.
அவன் அவை எல்லாவற்றையும் பார்த்தான் என்றிருப்பதே
பொருத்தமாகும். இறுதியில் வேற்றுமை உருபும் முற்றும்மையும்
வரவேண்டும் என்பது விதி . (நன்னூல் சூத்.245)
20. கதிர் அறுப்பவர்கள் உச்சி வேளையில் கஞ்சி சாப்பிடப்
போவார்கள்.
கஞ்சி குடிக்கப் போவார்கள் என்று திருத்துக. கஞ்சி
குடித்தல் என்று கூறுவது மரபு.
21. பல ஊர்த் தண்ணீர்கள் என் உடம்புக்குப் பிடிக்கவில்லை.
மக்கள்கள் நல்ல குறிக்கோட்களை இக்காலத்தில்
கொண்டிருப்பதில்லை,
இந்நூற்களில் பல நாட்டுக் கடற்களைப் பற்றித் தெரிந்து
கொள்வோம்.
பலரிடம் நட்புக்களைச் செய்வது நல்லதன்று.
முதல் வாக்கியத்திலுள்ள தண்ணீர்கள் என்பதைத் தண்ணீர்
என்று திருத்துக.
இரண்டாவது வாக்கியத்திலிருக்கும் மக்கள்கள் என்பதை மக்கள்
என்றும் குறிக்கோட்கள் என்பதைக் குறிக்கோள்கள் என்றும் திருத்துக.
|