|
31. நேரத்தைத் திரும்பப் பெறுவதெல்லாம் கிடையாது.
நேரத்தைத் திரும்பப் பெறுவதென்பது கிடையாது எனத்
திருத்துக.
32. சாக்கடை நீர் தெருவில் தேங்கி கிடப்பதால்
கொசுக்கள் விருத்தியாவதற்கு மிகவும் வசதியாய் இருக்கிறது.
இது தவறான வாக்கியம். கொசுக்கள் விருத்தியாவதற்கு மிகுந்த
வசதி இருக்கிறது என்று திருத்துக. கொதுகு என்பதுதான் சரியான
சொல். ஆனால், அச்சொல் பலருக்குத் தெரியாது. ஆதலால்,
கொசு என்பதையே பயன்படுத்துவோம்.
33. குளம் குட்டை துப்பரவு படுத்தப்படுகிறது.
குளம் குட்டைகள் துப்பரவு படுத்தப்படுகின்றன என்று திருத்துக.
உம்மைத் தொகை பன்மையீறு பெற்று வருவது மரபு.
34. நகரத்தில் கொடிய நோய்கள் வருமானால் அது பரவுவதற்கு
முன்னரே அதைத் தடுப்பதற்கு வழிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாக்கியத்தில் வரும் நோய்கள் என்னும் பன்மைப்
பெயருக்கு ஏற்றவாறு அது என்பதை அவை என்றும், அதை என்பதை
அவற்றை என்றும் திருத்துக.
35. இந்தியாவைக் காப்பது நமது கிராமங்கள்.
காப்பவை என்று திருத்துக. ஏன்? கிராமங்கள் என்னும்
பயனிலைக்கு ஏற்றவாறு காப்பவை என்னும் எழுவாய் இருப்பது
இன்றியமையாதது.
36. மனிதன் ஓய்வு இல்லாமல் வாழ முடியாது.
இங்குள்ள வாழ முடியாது என்பதை வாழ்வது முடியாது
எனத் திருத்துக. வாழ்வது எழுவாய்.
37. கோடைக்காலத்தில் மதுரையில் தண்ணீருக்குத்
தொல்லையாக இருக்கிறது.
|