|
திரு. ஜேம்ஸ் டேவிட் பாராட்டிதழையும் திரு ச. பழனியப்பன்
பாமாலையையும் முறையே படித்தளித்தனர் என்று திருத்துக.
57. மின்சார ரயில் நேற்று இருந்து கிடையாது.
‘நேற்றிலிருந்து ஓடுவது கிடையாது’ என்று திருத்துக.
58. மின்சார நிறுத்தம் ஏற்பட்டு ஆலையந்திரங்கள் நின்று
விட்டன.
இவ்வாக்கியத்திலுள்ள ‘ஏற்பட்டு’ என்னும் சொல்லை
‘ஏற்பட்டதால்’ என்று திருத்துக.
விருந்து மண்டபம் இடிந்து விழுந்து ஐம்பது பேர்கள்
மாண்டார்கள்.
விழுந்ததால் என்று திருத்துக.
59. காதல் என்பது வாணிகப் பொருள் இல்லை.
காதல் என்பது வாணிகப் பொருள் அன்று என்று திருத்துக.
60. அங்கே சிறியதும் பெரியதுமான பள்ளத்தாக்குகள்
இருக்கின்றன.
சிறியனவும் பெரியனவுமான என்று திருத்துக.
61. இழந்துபோன நகமும் கண்ணுமுடைய கழுகு இது.
இவ்வாக்கியத்தை, ‘நகமும் கண்ணும் இழந்துபோன கழுகு
இது’ என்று திருத்துக. அடைமொழி இடம் மாறி வந்திருப்பதே
தவறாகும்.
62. மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் 41 அடி தண்ணீரும்
பாபநாசம் அணைக்கட்டில் 21 அடி தண்ணீரும் இருக்கின்றன.
தண்ணீருக்குப் பன்மையில்லாததால் இருக்கின்றது என்று
திருத்துக அல்லது மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் 41 அடியும்,
|