பக்கம் எண் :

தேடி வைத்த செல்வம் 333


பாபநாசம் அணைக்கட்டில் 21 அடியும் தண்ணீர் இருக்கிறது
என்றெழுதலாம்,

63. பருந்தின் அலகானது வளைந்து நுனி கூர்மையாக
இருக்கும்.

பருந்தின் அலகானது வளைவாகவும் அதன் நுனி
கூர்மையாகவும் இருக்கும் என்று திருத்துக.

64. போன ஞாயிற்றுக் கிழமை நடந்த கூட்டத்தில் பேசும்
போது அவர் இதைச் சொன்னார்.

பேசிய போது என்று திருத்துக.

65. கூடத்திலிருந்த படத்தை இங்கு மாட்டியது யார்?

மாட்டியவர் யார் எனத் திருத்துக.

66. அவர் கூறுகையில் எத்தனை களைப்பாயிருந்தார்.

எவ்வளவு களைப்பாயிருந்தார் என்க.

67. ஸ்ரீமந் நாராயணன் வைகுண்டத்திலிருந்து இத்
திருமலையில் அவதரித்தான் என்று புராணங்கள் முறையிடுகின்றன.

கூறுகின்றன என்க.

68. இரு கட்சிக்கும் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது.

பேச்சு - தமிழ்சொல்; வார்த்தை - சம்ஸ்கிருதச் சொல். இது
School பள்ளிக்கூடம் என்பது போல இருக்கிறது. பேச்சு நடந்தது
என்றால் போதும்.

ஒருவர் இவ்வாக்கிய வழுக்களையும் திருத்தங்களையும்
அத்திருத்தங்களுக்குக் கூறும் காரணங்களையும் செவ்வையாகக்
கூர்ந்து கவனித்துப் படித்துத் தெரிந்து கொண்டால், பெரும்
பான்மையான வாக்கியப் பிழைகளை நீக்கி எழுதலாம். தேடி
வைத்த செல்வத்தை நாடி நின்று பயன்படுத்துவீர்களாக.