26.
சில இனிய வாக்கியங்கள்
1. அவர் கண்களில் தீப்பொறி பறக்கக் கைகால்கள் கோபத்தால்
துடிக்கச் சொற்களைக் கனல்போலக் கக்கினார்.
2. எப்படிக் கூறினார்? பெருமையோடா? அன்று, அன்று,
வெட்கத்தோடு; களிப்போடா? அன்று, அன்று, துக்கத்தோடு!
3. இவரது பேச்சு அடாணாவா, முகாரியா? வீரம் பேசுகிறாரா,
விம்மி அழுகிறாரா? எதுவும் விளங்கவில்லையே!
4. இந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் உண்ண
உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்கப் பாயின்றி, இருக்க
இடமின்றித் தவிக்கிறார்கள்.
5. அவர் பெரிய செயல்வீரர்; ஒயாது உழைப்பவர்; அஞ்சா
நெஞ்சினர்; ஒளிப்பு மறைப்பு இல்லாமல் உள்ளத்தில் தோன்றியுள்ளதைக்
கள்ளமின்றி வெள்ளையாகச் சொல்பவர்; சொல்லாற்றலில் நிகரற்றவர்.
6. அன்று வேம்பாக இருந்த கருத்துகள் இன்று கரும்பாக
இனிக்கின்றன.
7. நிதி மிகுவதால் மதி குறைந்து, ஆடம்பர வாழ்வு வாழ்ந்து
வருதல் கூடாது, கூடாது.
8. காலச் சக்கரம் சுழன்றது. உலக நிலை மாறியது.
9. அவன் முகத்தில் விளையாடிய முல்லை மென்னகையில்
சிறிது வெட்கமும் கலந்திருந்தது. இளைஞன் விழிகள் அன்பு நீரில்
மிதந்தன.
|