|
10. இவர் என்ன தீர்ந்து போன எரிமலையா, வறண்டு
போன நதியா, வளப்பம் இழந்த வயலா, வாடை இல்லா மலரா,
நனைந்து போன வெடி மருந்தா? சொல்லுங்கள்.
11. இன்றைய கிராம மக்கள், பாலின்றி வாடும் குழந்தை
போலவும், பருவமழை காணாப் பயிர் போலவும், நிலவு ஒளி இல்லாத
இரவு போலவும் இருந்து வருகிறார்கள்.
12. கனி தரா மரத்தைக் கட்டியழுவார் உண்டா? செல்லாத
காசைச் சேகரிப்பார் உண்டா? சரிந்து விழும் சுவரருகில் நிற்பதுதான்
தகுமா?
13. தலைவனைப் பிரிந்து அருந்துயரில் ஆழ்ந்த திருமகள்,
அரக்கியர் கொடுமையால் ஆற்றொணாத் துயரடைந்து, வெந்த புண்ணில்
வேல் நுழைந்தாற்போல மனம் நொந்து வருந்தினாள்.
14. மகன் மூச்சற்று விழுந்து கிடந்ததைக் கண்டதும் தாய்
அடியற்ற மரம்போலப் படிமிசை விழுந்து, கல்லும் புல்லும்
கரைந்துருகக் கதறியழலானாள்.
15. மயக்கமுற்றுக் கிடந்த இராமன் எழுந்து ஆரவாரித்ததைக்
கேட்ட திருமகள், கதிரவன் வரவு கண்ட கமலம் போன்று, அகமும்
முகமும் மலர்ந்தாள். இலங்கை மன்னன் முகம் காலைக் குமுதம்
போலக் கூம்பியது.
16. மணிமேகலை துறவுக் கோலத்துடன் அமுதசுரபியை ஏந்திக்
கொண்டு ஆதிரையின் வீட்டு வாயிலில் புனையா ஓவியம் போல
நின்றாள்.
17. அவன் எண்ணிய எண்ணம் மண்ணாயிற்று.
18. கண்மூடி வழக்கம் மண்மூடிப் போக வேண்டும்.
|