|
19. மலரும் மணமும் போலவும், நகமும் சதையும் போலவும்,
மணியும் ஒலியும் போலவும், வீணையும் நாதமும் போலவும், காதலர்
இருவரும் கனிந்த அன்புடன் இனிதாய் வாழ்ந்து வந்தனர்.
20. திரு.வி.க. தமிழ் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாயும் ஊன்று
கோலாயும் இருந்தார்.
21. ஒரு விளக்கில் ஏற்றிய மற்றொரு விளக்குப் போலத்
திலீபனுக்குத் பிறந்த குழந்தை திலீபனைப் போலவே இருந்தது.
21. ஒரு விளக்கில் ஏற்றிய மற்றொரு விளக்குப் போலத்
திலீபனுக்குப் பிறந்த குழந்தை திலீபனைப் போலவே இருந்தது.
22. ‘அதைக்கூடக் கேட்டால் சொல்ல மாட்டேன் என்கிறாயே’
என்று பல நாள்களாகக் கேட்டுப் பதில் கிடைக்காத கேள்வியை நான்
அன்று கேட்டேன்.
23. ஒரு நாள் கலிநங்கத்துப் பரணியைக் கையில் எடுத்துக்
படித்தபோது, நான் தேன் உண்ட வண்டானேன்.
24. அவ்வீரன் கேடயமும் வாளும் எடுத்துக் சென்றால்,
போர்க்களம் யானை புகுந்த நெற்களமாகிவிடும்.
25. தமிழிலக்கியம் காதலும் வீரமும் கலந்து மணம் பரப்பும்
சோலையாகும்.
26. மற மன்னர்க்குப் புறங்கொடாத வீரமும், மறு மங்கையர்க்கு
மார்பு கொடாத ஒழுக்கமும் உள்ளவனாய் விளங்கினான்
பூதப்பாண்டியன்.
|