|
கீழ்வரும் அழகிய வருணனைப்
பத்திகளைக் காண்க:
இளவேனிற் பருவம்
"காலதேவன் தன் சக்கரத்தை
உருட்டிக்கொண்டேயிருந்தான்.
பருவங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் மாறி மாறி வந்தன.
பின்பனிக்காலம்
முடிந்துவிட இளவேனில் தொடங்கிற்று. எங்கும்
பச்சைப்பசேல் என்று
மரகதப்புல் பரவிக் கிடந்தது. அதன் நடுவில்
புத்தம் புதிய மலர்கள்,
கூச்சம் தெளியாக் குழந்தைகள் போல, மெல்ல மெல்ல வெளியே தலை
நீட்டின. மரக்கிளைகளில் பசுந்தளிர்கள் கதிரவனின் ஒளியில் மின்னி
மினுக்கின."
மழை
"அனல் சொரிந்து மனிதர்களை
வறுத்தெடுக்குங் கடுங்கோடையில்
வானம் மப்புமந்தாரமாய் இருந்தது. பொழுது தேயத் தேய வானம்
கருநிறமுறத் தொடங்கிற்று. குதிரை மீது பின்னி விழும் சாட்டையைப்
போல விண்ணில் மின்னொளி காட்டிற்று ஒரு சமயம்; மறுசமயம்
மின்னலின் சுடர் வெள்ளம் அருவி போல ஆகாயத்தில் பாய்ந்தது.
இடியோ, வலையில் சிக்கிய விலங்கு போலக் குமுறிற்று. பிடிவாதம்
பிடித்து அழும் குழந்தை போலக் காற்று ஓலமிடத்
தொடங்கிற்று.
அவந்தியூருக்குப் பக்கத்திலுள்ள அஞ்சனகிரி மீது சூல் கொண்ட
மேகங்கள் சூழ்ந்து பைய ஊர்ந்தன. இரவும் வந்தது. மிகுந்த இருள்
தன் நீண்ட சிறகை உலகத்தின் மீது பரப்பிவிட்டது. இடி, மின்னல்,
காற்று, இருள் இவைகளுக்கு இடையே ஓயாது பெய்யும்
மழையின்
ஒலியும் எழுந்தது."
காலை
"காலையும் வந்தது.
கீழ்வானம் வெள்ளென்று வெளுத்து
விட்டது. மரங்களிலிருந்து கிளம்பும் பறவைகளின் இனிய ஒலி காற்றில்
மிதந்து வந்தது. குடியானவர்கள் தங்கள் வேலைகளைப் பார்க்கக்
கிளம்பி விட்டார்கள். ஆடுமாடுகளின் மணியோசை
|