பக்கம் எண் :

பத்தியமைப்பு 353


கேட்டது. உழவர்கள் உற்சாகமாகச் சீழ்க்கை அடிக்கும் குரல் எழுந்தது.
கடல் போலக் கழனிகள் மரகத ஒளி காட்டிக் காலைச் சுடர்
வெள்ளத்தில் மின்னின."

அறிஞர் அண்ணாவின் திருமேனி ஊர்வலம்

3-2-1969-ல் காலஞ் சென்ற தமிழக முதலமைச்சர் அறிஞர்
அண்ணாவின் உடல் 4-2-1969 முற்பகலில் ஊர்வலமாய்ச் சென்று
சென்னைக் கடற்கரையில் அடக்கஞ்செய்ததைக் குறிப்பிடுவன
இப்பத்திகள்.

"எழுத்தால், பேச்சால், ஆற்றலால், அறிவால், தொண்டால்,
பண்பால், பணிவால், கனிவால் தமிழக வரலாற்றில் குறிக்கப் படும்படியான
அந்த அறிஞர் பெருமகனாரின் அருமைத் திருமுகத்தைக் கடைசியாகத்
தரிசிக்க வழியெல்லாம் விழியெல்லாம் நீர் தேக்கி ஊர்வலத்தைப்
பார்க்கக் காத்திருந்த மக்கள் எத்தனை லட்சம் பேர்! அண்ணாவின்
பொன்னுடலை நன்றாகத் தாங்கி வந்த பீரங்கி வண்டி தூரத்தில்
வந்தபோதே பொங்கிப் பொருமித் துடித்த உள்ளங்கள் எத்தனை
எத்தனை லட்சம்! தமது வாழ்வுக் காலத்தையே ஒரு சகாப்தமாக்கி
முடித்துவிட்டுச் சென்ற அந்தப் பேரறிஞர் திருமுகத்தைக் கண்டதும்
குவிந்த கரங்கள் எத்தனை எத்தனை லட்சம்! கண்ணீரை அருவியாய்க்
கொட்டிய கண்கள் எத்தனை எத்தனை லட்சம்! கண்ணுக்கு ஒளியாய்த்
தமிழுக்குச் சுவையாய் மக்களுக்கு வாழ்வாய் அமைந்துவிட்ட அந்தத்
தலைவரின் இறுதிப் பயணம் சென்ற வழியெல்லாம் மலர் தூவி
மலைகளை வீசிய கரங்கள் எத்தனை எத்தனை லட்சம்! அந்த
அறிவுக் களங்சியத்தைத் தாங்கிய வண்டி தங்களை விட்டு முன்னோக்கி
நகர்ந்த போது இதயத்தையே, உயிர் மூச்சையே இழந்துவிட்டது போலக்
கதறித் துடித்துத் தரையில் புரண்டு புரண்டு புழுவாய்த் துடித்தவர்கள்
எத்தனை லட்சம் பேர்கள்!

"அலைகடலுக்கு எல்லையுண்டு. ஆனால், அண்ணாவின் உடல்
நல்லடக்கம் செய்யப்பட்ட கடற்கரையில் கூடிய மக்கள்

ந24