கடலுக்கு எல்லையே இல்லை. அண்ணா, அண்ணா என்று
எழும்பிய சோகக்குரல் அலைகடலின் ஒலியையே
அடக்கி விட்டது.
"அண்ணா! எங்கள் அண்ணா!" - இந்தக் குரல்கள்
வானமெங்கும்
எதிரொலித்தன." - நவமணி.
இவையெல்லாம் சிறந்த
எழுத்தாளர்கள் எழுதியவை.
சில வேளைகளில் ஒரே பத்தியில் ஒரு பொருளைப்
பற்றி
எழுதுதலுமுண்டு. அடுத்தவரும் ஒரே பத்தியில் வாழ்க்கைக்
குறிப்பு அமைந்திருப்பது காண்க.
"அருணகிரிநாதர்தொண்டை மண்டலத்தில் திருவண்ணாமலையில்
பிறந்தார். இவர் முருகப்பெருமானை வழிபட்டு அப்பெருமான் மீது பல
இனிய பாடல்களைப் பாடினார். அப்பாடல்களுக்குத் ‘திருப்புகழ்’ என்பது
பெயர். ‘வாக்கிற்கு அருணகிரி’ என்னும் செய்யுளடியால் இவர்
இனிமையாகப் பாடவல்லவர் என்பது புலனாகிறது. கந்தரந்தாதி,
கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலியவை இவர் இயற்றியவை.
இவரது காலம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டாகும். இவர்
கௌமார
சமயத்தினர்.
|